search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேச மழை பாதிப்பு
    X
    உத்தரபிரதேச மழை பாதிப்பு

    உத்தர பிரதேசத்தில் தொடரும் கனமழை- கட்டிடங்கள் இடிந்ததில் 3 நாளில் 15 பேர் பலி

    உத்தர பிரதேசத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், கடந்த நான்கு தினங்களில் மட்டும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக பிரயாக்ராஜ், உன்னாவ், கோரக்பூர், பிலிபிட் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    உத்தரபிரதேச மழை பாதிப்பு

    குடிசை வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளன. இந்த 14 மாவட்டங்களிலும் கடந்த நான்கு தினங்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் மழையால் 133 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். 23 விலங்குகளும் இறந்துள்ளன.

    உ.பி.யில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×