search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி
    X
    ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி

    ஜெயலலிதா மரண விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 4 வாரம் தடை நீடிப்பு

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரம் நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.

    இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரையும் அழைத்து விசாரித்தது.

    ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு தடை கேட்டு அப்பல்லோ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், ‘‘விசாரணை ஆணையத்தில் 21 மருத்துவர்களை கொண்ட குழுக்களை அமைத்து விசாரணை நடத்தவும், பல்வேறு தகவல்களை டாக்டர்கள் விசாரணை ஆணையத்திடம் அளித்த பிறகும் மீண்டும், மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

    ஜெயலலிதா

    இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதுவரை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

    அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

    இதை தொடர்ந்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரம் நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    Next Story
    ×