search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பியூஷ் கோயல்
    X
    பியூஷ் கோயல்

    ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியார் மயமாக்கும் திட்டமில்லை - மந்திரி திட்டவட்டம்

    ராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக அமைந்த மத்திய அரசில் ரெயில்வே துறைக்கென தனியாக 100 நாள் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தின்கீழ் ராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவைகளை நிர்வகிக்கும் பொறுப்புகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

    இதற்கான டெண்டர் இன்னும் 100 நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு ரெயில்வே பணியாளர்கள் தொழிற்சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. தனியார் வசம் ஓப்படைக்கப்பட்ட பின்னர் சேவைகள் தொடர்பான குறைபாடு மற்றும் கட்டண உயர்வை எப்படி கட்டுப்படுத்த முடியும்? என்ற கேள்வியும் எழுந்தது.

    சதாப்தி எக்ஸ்பிரஸ்


    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுரேந்திரநாத் நாகர் என்பவரின் கேள்விக்கு எழுத்து மூலமாக இன்று பதிலளித்த ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், ‘ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களையோ இந்த துறைசார்ந்த வேறெந்த அமைப்பையோ தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை’ என தெரிவித்தார்.
    Next Story
    ×