search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்திரி பியுஷ் கோயல்"

    டெல்லியில் இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தில் 46 திருத்தங்களுடன் பல்வேறு பொருட்களுக்கு வரிவிதிப்பில் சலுகை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. #GSTCouncil #taxratesslashed #consumerproducts
    புதுடெல்லி:

    நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 28-வது கூட்டம் டெல்லியில் மத்திய (இடைக்கால) நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநிலங்களை சேர்ந்த நிதி மந்திரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 46 திருத்தங்களுடன் பல்வேறு பொருட்களுக்கு  வரிவிதிப்பில் சலுகை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு  12 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து பூரண விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    68 சென்ட்டி மீட்டர்கள் வரையிலான தொலைக்காட்சி பெட்டிகள். லித்தியம் இயான் பேட்டரிகள், வேக்கம் கிளீனர்கள், அறைவை இயந்திரங்கள், மிக்சி, வாட்டர் ஹீட்டர்கள், தலை, கைகளுக்கான டிரையர்கள், பெயிண்ட், வார்னீஷ், நறுமணப் பொருட்கள், குளியலறை ஸ்பிரே, ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின்கள், டிரைலர்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் சாதனங்களுக்கான வரி 28-லிருந்து 18 சதவீதமாக இனி குறைக்கப்படும்.

    பளிங்கு, மரம் மற்றும் கற்களால் செய்த சாமி சிலைகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து 100 சதவீதம் விலக்கு. (தங்கத்திலான மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்படாத) ராக்கி கயிறுகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து 100 சதவீதம் விலக்கு. 

    5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்பவர்கள் இனி காலாண்டுக்கு பதிலாக மாதந்தோறும் ஜி.எஸ்.டி. வரியை செலுத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்துக்கான வரி 5 சதவீதமாக குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் கூடிய 46 பரிந்துரைகள் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. 

    இந்த அம்சங்கள் யாவும் வரும் 27-ம் தேதி முதல்அமலுக்கு வரும் என நிதி மந்திரி பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். #GSTCouncil #taxratesslashed #consumerproducts
    ×