search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ்தானி"

    ராஜ்தானி மற்றும் சகாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளுக்கான உணவு அளவு குறைப்பு திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது. #IRCTC #Rajdhani #ShatabdiTrains
    புதுடெல்லி:

    ரெயில்களில் வழங்கப்படும் உணவு குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    உணவின் தரம் போதுமான அளவுக்கு இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இதை மாற்றி அமைக்க ரெயில்வே இலாகா பல்வேறு புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மேற்கொண்டுள்ளது. சைவம், அசைவம் இரு வகை உணவுகளையும் பயணிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.

    பொதுவாக பயணிகளுக்கு 750 கிராம் உணவு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சராசரியாக 900 கிராம் உணவுகளை வழங்கி வருகிறது.

    இதன் காரணமாக பயணிகளுக்கு வழங்கப்படும் உணவில் இழப்பு ஏற்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. கூறுகிறது. அதாவது ஒரு மதிய உணவுக்கு ரூ.112 வசூல் செய்கிறார்கள். ஆனால் அதற்கான செலவு ரூ.150 வரை ஆகிறது.


    என்றாலும் உணவு வகைகளில் தரம் இல்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறது. இந்த குறையை நிவர்த்தி செய்ய அளவை குறைத்து தரத்தை உயர்த்த ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி இனி உணவு வகைகளில் தற்போது வழங்கப்படும் 150 கிராம் பருப்பை 100 கிராமமாக குறைக்க முடிவு செய்துள்ளனர். இதுபோல எலும்பு இல்லாத கோழிக்கறி அளவையும் குறைக்க உள்ளனர்.

    இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் முதல் கட்டமாக 27 ராஜ்தானி மற்றும் சகாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உணவு அளவு குறைப்பு திட்டம் அமலுக்கு வர உள்ளது. #IRCTC #Rajdhani #ShatabdiTrains
    ×