search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை
    X

    வருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

    வருங்கால சந்ததியினருக்காக நாம் தண்ணீரை சேமிக்க வேண்டும் என பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவரது உரையில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5வது இடம் வகிக்கிறது. கருப்பு பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கை தொடரும். ஜிஎஸ்டி வரி முறையால் சிறு தொழில்கள் பலன்பெற்றுள்ளன



    வருங்கால சந்ததியினருக்காக நாம் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். அதற்கான உறுதியான நடவடிக்கைதான் ஜல்சக்தி துறை உருவாக்கம். கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது. எந்த துறையிலும் லஞ்சம் மற்றும் ஊழலை அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது.

    சட்டவிரோத குடியேறிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

    பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா சபை அறிவித்ததே இதற்கு சான்று.

    விண்வெளி தொழில்நுட்பத்தால் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசத்தில் ராணுவ தளவாட உற்பத்தி பாதை ஏற்படுத்தப்படும். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த அரசு பணியாற்றி வருகிறது. 2022ம் ஆண்டில் ஜி20 நாடுகளின் கூட்டத்தை இந்தியா நடத்த உள்ளது.

    இவ்வாறு அவர்  பேசினார்.
    Next Story
    ×