search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் மேலும் 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சி நீடிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    X

    காஷ்மீரில் மேலும் 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சி நீடிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மேலும் 6 மாத காலத்துக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்த மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைத்தது. மெகபூபா முப்தி முதல் மந்திரியாக பதவி வகித்தார்.

    சில ஆண்டுகளுக்கு பின்னர், இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, அரசில் இருந்து பாஜக வெளியேறியது. இதைத்தொடர்ந்து மெகபூபா முப்தி முதல் மந்திரி பதவியை ஜூன் மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபையும் கலைக்கப்பட்டது.

    ஆறு மாதமாக நடைபெற்றுவந்த கவர்னர் ஆட்சி டிசம்பர் 18-ம் தேதி முடிவடைந்த நிலையில், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்தது. இதையேற்று ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் பிரகடனத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டார்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஜூலை 3-ம் தேதி முதல் அடுத்த 6 மாத காலத்துக்கு ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×