search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cabinet approve"

    அனைவருக்கும் அகன்ற அலைவரிசை சேவை வழங்குவதை நோக்கமாக கொண்ட புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #MinisterManojSinha #Broadband #TelecomePolicy
    புதுடெல்லி:

    தற்போது, 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய தொலைத்தொடர்பு கொள்கை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், நவீன மாற்றங்களுக்கு ஏற்ப புதிய தொலைத்தொடர்பு கொள்கையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

    ‘தேசிய டிஜிட்டல் தொடர்பு கொள்கை-2018’ என்று இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது. தொலைத்தொடர்பு ஆணையத்தின் பெயரை ‘டிஜிட்டல் தொடர்பு ஆணையம்’ என்று மாற்றவும் இதில் வகை செய்யப்பட்டு உள்ளது.இந்த கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய மந்திரி மனோஜ் சின்கா நிருபர்களிடம் கூறியதாவது:-



    இந்த கொள்கையின் முக்கிய நோக்கம், 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து குடிமக்களுக்கும் பிராட்பேண்ட் (அகன்ற அலைவரிசை) சேவை வழங்குவது ஆகும். மேலும், டிஜிட்டல் தொடர்பு துறையில் 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன்மூலம், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், டிஜிட்டல் துறையின் பங்களிப்பு 8 சதவீதமாக உயர்த்தப்படும். இந்த துறையில் ரூ.720 கோடி முதலீடு ஈர்க்கப்படும். அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 2020-ம் ஆண்டுக்குள் ஒரு ஜி.பி. திறன்கொண்ட அகன்ற அலை வரிசை சேவையும், 2022-ம் ஆண்டுக்குள் 10 ஜி.பி. திறன்கொண்ட அகன்ற அலைவரிசை சேவையும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது:-

    மருத்துவ கல்வியை நிர்வகிக்கும் அமைப்பான இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ.) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்குவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே சமயத்தில், மருத்துவ கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. ஆகவே, நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படும்வரை, மருத்துவ கவுன்சிலை நிர்வகிக்க பிரபலமான நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.இந்த குழு அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதலுடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

    ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கில் 49 சதவீத பங்குகள் மட்டுமே அரசுக்கு சொந்தமாக உள்ளது. 100 சதவீத பங்குகளையும் வாங்கி, அதை அரசு நிறுவனமாக மாற்றும் முடிவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    இதில், 50 சதவீத பங்குகளை மத்திய அரசும், மீதி பங்குகளை மாநில அரசுகளும் வைத்திருக்கும்.சர்க்கரை தொழில்துறைக்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி நிதிஉதவி அளிப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.  #MinisterManojSinha #Broadband #TelecomePolicy 
    ×