என் மலர்

  செய்திகள்

  யோகா பயிற்சியை ஏற்படுத்தி கொள்ளுங்கள்- நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்
  X

  யோகா பயிற்சியை ஏற்படுத்தி கொள்ளுங்கள்- நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக யோகா பயிற்சியை ஏற்படுத்தி கொள்ளுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  புதுடெல்லி:

  பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்று ஐ.நா. சபை ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

  அதன்படி 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 5-வது ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது.

  பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு இந்த விழாவில்தான் பங்கேற்க உள்ளார். டெல்லி, சிம்லா, மைசூர், ஆமதாபாத், ராஞ்சி ஆகிய 5 நகரங்களில் ஏதாவது ஒரு நகரில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

  தீவிர ஆய்வுக்கு பிறகு ராஞ்சி நகரில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


  பிரதமர் மோடி 21-ந்தேதி சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை செய்ய இருக்கிறார். இதை முன்னிட்டு அவர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு சிறிய வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  யோகா பயிற்சியை ஒவ்வொருவரும் தினமும் செய்ய வேண்டும். யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதவை. யோகா பயிற்சியை உங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக ஏற்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்மையை தரும்.

  வருகிற 21-ந்தேதி நாம் அனைவரும் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்போம். நீங்களும் யோகா செய்யுங்கள். மற்றவர்களுக்கும் யோகா பயிற்சி செய்ய முன்மாதிரியாக இருங்கள்.

  இவ்வாறு மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.

  மோடி வெளியிட்டுள்ள வீடியோவில் யோகா சனங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி சிறப்பு வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×