search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச யோகா தினம்"

    • கல்லூரி முதல்வர் திருமால்முருகன் சிறப்புரையாற்றினார்.
    • பேராசிரியர் சுமதி சிறப்பு யோகாசனங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாத்துறை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக யோகா தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.

    இவ்விழாவில் கல்லூரி முதல்வர் திருமால்முருகன் சிறப்புரையாற்றினார்.செயலர் ஷோபா தலைமையுரை ஆற்றினார்.

    மேலும் தமது தலைமையுரையில், மாணவர்கள் தினமும் யோகா செய்வதன் மூலம் மனவலிமை மற்றும் உடல்நலம் பெற முடியும் என்பதை அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்வில் மாணவர் களும் பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

    யோகாத்துறை பேராசிரியர் சுமதி பெண்களுன சிறப்பு யோகாசனங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கினார்.

    ஆயுட்காலத்தை நீடிக்கும் உணவுமுறைகள் மற்றும் முத்திரை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    தாவரவியல் துறை தலைவர் மஞ்சுளா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சி அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையாக அமைந்தது. இவ்விழாவானது இனிதே நாட்டுப் பண்ணுடன் நிறைவுற்றது.

    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்து வரும் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாடி உள்ளார்.
    • உங்களுக்கு பிடித்த யோகாசனம் எது? என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட அவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மத்திய, மாநில மந்திரிகள், அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்து வரும் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாடி உள்ளார். இதுதொடர்பான படத்தை அவர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சர்வதேச யோகா தினமான இன்று விண்வெளி நிலையத்தில் யோகா பயிற்சி செய்து வருகிறேன். யோகா உடலை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனதையும் கூர்மைபடுத்துகிறது. மேலும் மன அழுத்தத்தை குறைக்கிறது. உங்களுக்கு பிடித்த யோகாசனம் எது? என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட அவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
    • ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் யோகா தினம் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். வரும் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார்.

    இந்நிலையில், வரும் 21-ம் தேதி முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    மறுநாளான 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு அதிபர் ஜோ பைடன் இரவு நேர விருந்து அளிக்கிறார். அதற்கடுத்த நாள் வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகின்றனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    அமெரிக்கா, இந்தியா ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம், அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யோகா தினத்துக்கு 100 நாட்கள் உள்ள நிலையில் அதை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
    • நீங்கள் யோகாவை ஒரு பகுதியாக மாற்றவில்லை என்றால் அதை சீக்கிரம் செய்யுங்கள் என்று பிரதமர் மோடி உள்ளார்.

    சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. யோகா நிகழ்ச்சிக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில் வருகிற 13 முதல் 15-ந்தேதி வரை டெல்லியில் 3 நாட்கள் யோகா நிகழ்ச்சி நடக்கிறது.

    இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறும்போது, 'யோகா தினத்துக்கு 100 நாட்கள் உள்ள நிலையில் அதை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் யோகாவை ஒரு பகுதியாக மாற்றவில்லை என்றால் அதை சீக்கிரம் செய்யுங்கள்' என்று கூறி உள்ளார்.

    • சர்வதேச யோகா தின நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராசு, மற்றும் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யோகா செய்முறை பயிற்சிகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டம் ஆடல், பாடல், விழாக்கள செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீரடிபட்டி குடியிருப்பில் செயல்பட்டு வரும்

    இல்லம் தேடி கல்வி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச யோகா தின நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராசு, மற்றும் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யோகா செய்முறை பயிற்சிகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

    இதேபோல அம்மா புதுப்பட்டி, மருங்கூரணி, ராசா பட்டி, வடுகப்பட்டி மல்லிகை நத்தம், மஞ்ச பேட்டை, மங்கனூர், வலச்சேரிப்பட்டிஆகிய இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு சர்வதேச யோகா தினம் குறித்த விழிப்புணர்வும், பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    • தெய்வானை அம்மாள் கல்லூரியில் - சர்வதேச யோகா தினம் நடைபெற்றது,
    • கூடுதல் சேவை அமைப்புக்களைச் சேர்ந்த 50 மாணவியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் கல்லூரி மைதானத்தில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் அகிலா, துணை முதல்வர் பேராசிரியர் செல்வி, மாணவியர் புலமுதன்மையர் பேராசிரியர் ராஜேஷ்வரி, யோகா மாஸ்டர்வெங்கடேசன், கூடுதல் சேவை அமைப்புகளைச் சார்ந்த பேராசிரியர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், பல்வேறு கூடுதல் சேவை அமைப்புக்களைச் சேர்ந்த 50 மாணவியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.

    • சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் விளையாட்டு அரங்கில் யோகாதினவிழா நடைபெற்றது.
    • இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும், 350-க்கும் மேற்பட்ட கோர்ட்டு ஊழியர்களும் கலந்து கொண்டனர்

    திண்டுக்கல்:

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் யோகாசன சங்கம் சார்பில் விளையாட்டு அரங்கில் யோகாதினவிழா நடைபெற்றது.

    மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜி.சுந்தர்ராஜன் இதனை தொடங்கி வைத்தார். துணை மேயர் ராஜப்பா, விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, யோகாசனசங்க ஒருங்கிணை்பபாளர் ராஜகோபால், செயலாளர் நித்யாராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறினர். இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விதவிதமான ஆசனங்களை செய்து காட்டினர்.

    அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது.

    உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடந்த இந்த முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி லதா தலைமையில் நீதிபதிகள் மோகனா, சரவணன், ஜான்வினோ, விஜயகுமார், பாரதிராஜா மற்றும் நடுவர்கள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் என 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பரபரப்பான பணிகளில் ஈடுபடும் கோர்ட்டு ஊழியர்கள் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யோகா ஏற்படுத்தும் அமைதி தனிப்பட்டவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.
    • நம்முடைய சமூகத்திற்கே யோகா அமைதியை தருகிறது.

    மைசூர்:

    சர்வதேச யோகாதினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் யோகாசன நிகழ்ச்சி நடந்தது.

    கர்நாடக மாநில மைசூர் அரண்மனையில் இன்று காலை பிரமாண்ட யோகா சன நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். அவர் வெள்ளை உடை அணிந்து யோகாசனம் செய்தார், அவருடன் கவர்னர் தாவர்சந்த்கெலாட்.கர்நாடக முதல்- மந்திரி பசவராஜ்பொம்மை, மத்திய மந்திரி சர்பானந்தா சோனவால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    பிரதமர் மோடியுடன் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். இதற்காக அவர்கள் அதிகாலை முதலே அரண்மனை வளாகத்தில் குவிந்தனர்.

    நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    மனதையும்,உடலையும் சீராக வைத்திருக்க யோகா உதவுகிறது.அனைத்து பிரச்சினைகளுக்கும் யோகா ஒரு தீர்வாக அமைகின்றது. இந்த ஒட்டு மொத்த உலகமும் நமது உடலில் இருக்கும் ஆன்மாவில் இருந்து தான் தொடங்குகிறது.

    யோகாவை கூடுதல் வேலையாக நாம் நினைக்க கூடாது.

    யோகா தான் நமக்குள் இருக்கும் அனைத்தையும் உணர்த்துகின்றன. விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. நமக்கு மன அமைதியை யோகா கொடுக்கிறது.

    யோகா ஏற்படுத்தும் அமைதி தனிப்பட்டவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நம்முடைய சமூகத்திற்கே யோகா அமைதியை தருகிறது.

    இந்த நாட்டுக்கும், உலகிற்கும் யோகா அமைதியை கொடுக்கிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகத்தில் யோகாசன நிகழ்ச்சி.
    • மத்திய தொல்லியல் கலாச்சாரத் துறை அலுவலர்களுடன் யோகாசனம் செய்தார்.

    கன்னியாகுமரி:

    2014-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவில் உள்ள முக்கியமான 75 இடங்களில் பலதரப்பு மக்களும் கூட்டாக பங்கேற்கும் வகையில் இன்று யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசின் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகத்தில் யோகாசன நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    இதில் மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சார துறை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டு யோகா சனம் செய்தார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உள்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    முன்னதாக அதிகாலை 6 மணிக்கு சூரியன் உதயமாகும் நேரத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மத்திய மந்திரி மீனாட்சி லேகி , மத்திய தொல்லியல் கலாச்சாரத் துறை அலுவலர்களுடன் யோகாசனம் செய்தார்.

    • கர்நாடக மாநிலம் மைசூரில் இன்று நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுதும் 75 நகரங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மைசூரு:

    ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை 2015ல் அறிவித்தது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுதும், 75 நகரங்களில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அரண்மனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி செய்தார்.

    ×