search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் பிரியங்காவுக்கு 41 தொகுதி, ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு 39 தொகுதிகள் ஒதுக்கீடு - ராகுல் காந்தி திட்டம்
    X

    உ.பி.யில் பிரியங்காவுக்கு 41 தொகுதி, ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு 39 தொகுதிகள் ஒதுக்கீடு - ராகுல் காந்தி திட்டம்

    உ.பி.யில் பிரியங்காவுக்கு 41 தொகுதி, ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு 39 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #PriyankaGandhi

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.

    அரசியல் களத்தில் கால் பதித்துள்ள பிரியங்கா காந்தி வருகை காங்கிரசாரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

    பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கட்சி தொண்டர்களை சந்திப்பது, சுற்றுப் பயணம் என மும்முரமாக உள்ளார். கடந்த 11-ந்தேதி ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் லக்னோவில் கூட்டாக ரோடு ஷோ நடத்தினர்.

    இந்த நிலையில் பிரியங்கா காந்தி பொறுப்பில் உ.பி.யில் 41 பாராளுமன்ற தொகுதிகளை ராகுல்காந்தி ஒதுக்கி உள்ளார். லக்னோ, அமேதி, ரேபரேலி, சுல்தான்பூர், கோரக்பூர், வாரணாசி, பூல்பூர், அலாகாபாத் உள்ளிட்ட 41 தொகுதிக்கு பிரியங்கா காந்தி பொறுப்பு வகிப்பார்.

    இதேபோல் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், மொராதாபாத், காஜியாபாத், மதுரா, பிலிபித், கான்பூர் உள்ளிட்ட 39 தொகுதிகளின் பொறுப்புகளை ராகுல் வழங்கி உள்ளார்.

    பிரதமர் மோடி வென்ற வாரணாசி தொகுதி பிரியங்கா காந்தி பொறுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi #PriyankaGandhi

    Next Story
    ×