search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் ஸ்டிரைக்- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் ஸ்டிரைக்- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    ஜம்மு காஷ்மீரில் அப்சல் குருவின் ஆறாவது நினைவு தினத்தையொட்டி பிரிவினைவாதிகள் இன்று நடத்திய ஸ்டிரைக் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. #Saparatistscallforstrike
    ஸ்ரீநகர்:

    பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குரு கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று தூக்கிலிடப்பட்டான். பின்னர் டெல்லியில் உள்ள திகார் சிறையிலேயே அவனது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அப்சல் குருவின் ஆறாவது நினைவு தினத்தையொட்டி, ஜம்மு காஷ்மீரில் இன்று பிரிவினைவாத அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள பெரும்பாலான கடைகள், வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டன. வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.  இதனால் ஜம்மு காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



    ஹூரியத் மாநாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய ஜேஆர்எல் அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. சிறையில் அடக்கம் செய்யப்பட்ட அப்சல் குருவின் உடலை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களான சையத் அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் உள்ளிட்ட பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாத வகையில் அவர்களை போலீசார் வீட்டுக் காவலில் வைத்தனர். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்காக, காஷ்மீரின் பல இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். #Saparatistscallforstrike

    Next Story
    ×