search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி நியமித்த நிர்வாகிகளுடன் சோனியாவின் 9 பேர் குழு
    X

    ராகுல்காந்தி நியமித்த நிர்வாகிகளுடன் சோனியாவின் 9 பேர் குழு

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமித்த நிர்வாகிகளுடன் சோனியா காந்தியின் பழைய நிர்வாகிகள் 9 பேர் குழுவும் ஒன்று சேர்ந்து பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். #Congress
    புதுடெல்லி:

    2019 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆளும் பா.ஜனதா தயாராகி வருகிறது. எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்கவும், பிரதமர் மோடியின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறவும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவின் பிரசாரத்தை முறியடிக்க காங்கிரசும் வியூகம் வகுத்து வருகிறது. ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவரான பிறகு முதல் முறையாக 4 மாநில சட்டசபை தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க இருக்கிறார்.

    தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்ற இளம் தலைவர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமித்து இருக்கிறார். இவர்களிடம் தேர்தல் பணிகளை ஒப்படைக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார்.

    இவர்களுக்கு பக்கபலமாக சோனியாவும் தனது பழைய நிர்வாகிகள் குழுவை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார். ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் பொருளாளர் அகமது படேல், ஏ.கே.அந்தோணி. ப.சிதம்ரம், மல்லிகார்ஜுனை கார்கே, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருடன் ராகுல்காந்தி நியமித்த தகவல் தொடர்பு பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, கர்நாடக பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் அடங்கிய 9 பேர் குழுவை சோனியா காந்தி நியமித்துள்ளார்.

    இவர்கள் ராகுல்காந்தி நியமித்த புதிய நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள். தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.

    கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் போன்ற பணிகளில் ராகுல்காந்தி குழுவும், சோனியா குழுவும் இணைந்தே ஈடுபடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.  #Congress
    Next Story
    ×