என் மலர்

  செய்திகள்

  காவிரி தண்ணீரை முழுமையாக தடுக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா மீண்டும் தீவிரம்
  X

  காவிரி தண்ணீரை முழுமையாக தடுக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா மீண்டும் தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி தண்ணீரை முழுமையாக தடுக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்ட மீண்டும் அனுமதி அளிக்க கோரி நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு செயல்திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. #karnataka #cauvery

  பெங்களூர்:

  கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜா சாகர் அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் தமிழகத்துக்கு வருகிறது.

  இந்த காவிரி தண்ணீரை முழுமையாக தடுக்கும் விதமாக கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளது.

  கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஆற்றின் குறுக்கே சிவசமுத்திரம் அருவின் அருகே மேகதாது எனும் இடத்தில் இரண்டு தடுப்பணைகள் அமைக்க முடிவு செய்துள்ளது.

  ரூ.5912 கோடி செலவில் 67.14 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையையும், 400 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர் மின் நிலையத்தையும் அமைக்க திட்டமிட்டு உள்ளது.

  மேகதாது அணைத்திட்டம் ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், மேட்டூரில் இருந்த 65 கிலோ மீட்டர் தொலைவிலும் செயல்பட உள்ளது.

  கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்துக்கு தமிழக அரசும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


  இந்த திட்டம் நிறைவேறினால் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் உள்பட காவிரி வடிநில மாவட்டங்கள் காவிரி ஆற்று நீர் வரத்து இல்லாமல் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

  இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் தீவிரம் காட்டியுள்ளது.

  பெங்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்க உதவும் இந்த அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க கோரி மத்திய நீர்வள கமி‌ஷனிடம் கர்நாடக அரசு செயல்திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

  இந்த திட்டம் தொடர்பான கருத்தை தெரிவிக்குமாறு தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளை மத்திய நீர்வள கமி‌ஷன் கேட்டுக் கொண்டுள்ளது.

  இதேபோல மத்திய மின் ஆணையம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பல துறைகளிடமும் மத்திய நீர்வள ஆணையம் கருத்து கேட்க உள்ளது.

  இதற்கிடையே மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து கர்நாடக முதல்- மந்திரி குமாரசாமி மேகதாது பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ்நாடு மற்றும் கர்நாடக முதல்- அமைச்சர்கள் கூட்டு கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

  மேகதாது அணை தொடர்பாக தமிழக, கேரள அரசு அதிகாரிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. #karnataka #cauvery

  Next Story
  ×