search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயக்க மருந்து ஓவர்டோஸ் - ஆபரேசன் தியேட்டரில் பெண் நோயாளி மரணம்
    X

    மயக்க மருந்து ஓவர்டோஸ் - ஆபரேசன் தியேட்டரில் பெண் நோயாளி மரணம்

    ஜம்மு காஷ்மீரில் அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் நோயாளி, அதிக அளவு மயக்க மருந்து காரணமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#AnesthesiaOverdose
    ஜம்மு:

    ஜம்முவின் நானக் நகரைச் சேர்ந்தவர் பிரவீன் கவுர் (வயது 55). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஷாலிமார் பகுதியில் உள்ள காது, மூக்கு, தொண்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடலைப் பரிசோதித்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதன்படி இன்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆபரேசன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிக அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் அவர் இறந்திருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டமும் நடத்தினர்.

    இதுகுறித்து போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மருத்துவ விதி மீறல் ஏதும் உள்ளதா என்பதை விசாரிப்பதற்காக மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.#AnesthesiaOverdose
    Next Story
    ×