search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் நிபா காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
    X

    கேரளாவில் நிபா காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

    நிபா காய்ச்சால் காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் நேற்று உயிரிழந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. #NipahVirus #Kerala

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 50 டோசோஜ் மருந்துகள் வந்துள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் மருந்து வரவழைக்கப்படுமென்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், நிபா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மதுசூதனன் (55) என்பவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நிபா காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 17 பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NipahVirus #Kerala
    Next Story
    ×