search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் தங்க நாணய மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது
    X

    திருப்பதியில் தங்க நாணய மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது

    திருப்பதியில் தங்க நாணய மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் சிலர் தங்க நாணயங்களை தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்டு வருவதாக, திருப்பதி குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் அப்பண்ணா தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களுக்குச் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதி பாலாஜி காலனி சர்க்கிள் அருகில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    3 பேரும் வாயில்பாடு மண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணாரெட்டி, கலிகிரி மண்டலத்தைச் சேர்ந்த வெங்கடசிவாரெட்டி மற்றும் லட்சுமணன் எனத் தெரிய வந்தது.

    3 பேரும் கூட்டாக சேர்ந்து திருப்பதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம், தங்க நாணயங்களை தருவதாக கூறி, போலி தங்க நாணயங்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக ஒப்புக்கொண்டனர்.

    மேலும் திருப்பதி, சித்தூர், குண்டூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், நல்கொண்டா, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் பொதுமக்களிடம், தங்க நாணயங்களை தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறினர். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்து 25 ஆயிரம், 2 கிராம் அசல் தங்க நாணயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×