என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் போலீஸ் காவலில் வாலிபர் பலி - இன்ஸ்பெக்டர் கைது
Byமாலை மலர்2 May 2018 6:07 AM GMT (Updated: 2 May 2018 6:07 AM GMT)
கேரளாவில் போலீஸ் காவலில் இருந்த வாலிபல் உயிரிழந்தது தொடர்பாக சரியான முறையில் விசாரணை மேற்கொள்ளாததால் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலுவாவை அடுத்த வராப்புழா பகுதியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வராப்புழா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஸ்ரீஜித் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ஸ்ரீஜித்தை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு இறந்துவிட்டார்.
இது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலை சம்பவத்தில் தொடர்பு இல்லாத ஸ்ரீஜித்தை போலீசார் ஆள் மாறாட்டத்தில் கைது செய்ததாகவும் விசாரணை என்ற பெயரில் அவரை போலீசார் அடித்து கொன்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
வாலிபர் ஸ்ரீஜித் சாவு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரை கண்டித்து அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதை தொடர்ந்து போலீஸ் காவலில் வாலிபர் இறந்தது தொடர்பாக ஐ.ஜி. தலைமையில் விசாரணை நடந்தது.
இதை தொடர்ந்து வராப்புழா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
வாலிபர் ஸ்ரீஜித் இறந்த சம்பவத்தில் வராப்புழா போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்பின் சேம் 5-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று ஆலுவா போலீஸ் கிளப்பில் வைத்து அவரிடம் ஐ.ஜி. நேரடி விசாரணை நடத்தினார்.
அப்போது ஸ்ரீஜித் கைது தொடர்பான வழக்கில் சரியான முறையில் விசாரணை நடைபெறாததும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை உரிய முறையில் இன்ஸ்பெக்டர் ஆய்வு செய்யாததும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கிறிஸ்பின் சேம் அதிரடியாக கைது செய்யப்பட்டர். அவர், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Next Story
×