என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உலக பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து பயணம்
புதுடெல்லி:
உலக பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
48-வது உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 4 நாட்கள் நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார். அவருடன் மத்திய மந்திரிகள் சுரேஷ்பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திரபிரதான், மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் மற்றும் முகேஷ் அம்பானி, ஆசிம்பிரேம்ஜி, ராகுல்பஜாஜ் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
நாளைய தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரேசாமே, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட 130 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஒருங்கிணைந்த எதிர்கால நலன்களை உருவாக்குவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.
உலக பொருளாதார மாநாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் பங்கேற்கிறார். கடைசியாக 1997-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவே கவுடா இந்த மாநாட் டில் பங்கேற்று இருந்தார். #PMModi #World Economic2018 #tamilnews