search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ல் தொடக்கம்: பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்
    X

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ல் தொடக்கம்: பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் தெரிவித்துள்ளார். #parliament #budgetsession #tamilnews
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-12-2017 அன்று தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதில் மக்களவையில் நிதி தீர்வு மற்றும் பாதுகாப்பு மசோதா, முத்தலாக் முறை ஒழிப்பு மசோதா உள்பட சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த கூட்டத்தொடரில் குஜராத் மாநில தேர்தல் பிரசாரத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோரை பாகிஸ்தானுடன் தொடர்புப்படுத்தி பிரதமர் மோடி பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கின.

    பீமா கோரேகா நினைவு தினத்தன்று சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. மேலும், மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் உள்ளிடட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. இதனால் முத்தலாக் மசோதா நிறைவேறாமலேயே கூட்டத் தொடர் நிறைவுபெற்றது. இந்த மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் எடுத்துக்கொள்ளப்படும்.

    இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி முதல் தொடங்கும் என்றும், பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது.

    மேலும், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரையிலும், இரண்டாவது அமர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரையிலும் நடைபெறும்” என்றார். #parliament #budgetsession #tamilnews
    Next Story
    ×