என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15-ம் தேதி தொடக்கம்: ஜனவரி 5-ம் தேதி நிறைவு
Byமாலை மலர்24 Nov 2017 7:14 AM GMT (Updated: 24 Nov 2017 7:14 AM GMT)
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15-ம் தேதி தொடங்கும் என பாராளுமன்ற விவகார மந்திரி அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி குளிர்கால கூட்டத்தொடரை தொடங்குவதில் கால தாமதம் செய்து வருகிறது என காங்கிரச் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கும் என பாராளுமன்ற விவகார துறை மந்திரி அனந்தகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் மொத்தம் 14 நாள்கள் நடைபெறுகிறது. இதில், டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகள் கிறிஸ்துமஸ் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும், கூட்டத் தொடரில் ஆங்கில புத்தாண்டு உள்பட அனைத்து நாள்களிலும் உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ஜி.எஸ்.டி வரி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜம்மு-காஷ்மீர், தீவிரவாதம், பாக். நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஹபீஸ் சயீத் விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகளை இந்த கூட்டத்தொடரில் எழுப்ப உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Next Story
×