search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 9 குழந்தைகள் மரணம்
    X

    குஜராத் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 9 குழந்தைகள் மரணம்

    குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 9 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 9 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தனர். அதில் ஐந்து குழந்தைகள் உடல்நலக்குறைவு காரணமாக அம்மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர் எனவும், அம்மருத்துவமனையில் பிறந்த நான்கு குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்தனர் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரே நாளில் 9 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×