என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோரக்பூர் என்ன, பிக்னிக் ஸ்பாட்டா? - ராகுல் மீது யோகி ஆதித்யாநாத் பாய்ச்சல்
Byமாலை மலர்19 Aug 2017 7:33 AM GMT (Updated: 19 Aug 2017 7:33 AM GMT)
கோரக்பூரில் 71 குழந்தைகள் பலியான ஆஸ்பத்திரியை பார்வையிடவரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கோரக்பூர் என்ன, பிக்னிக் ஸ்பாட்டா? என கேட்டுள்ளார்.
லக்னோ:
உத்தரபிரதேசம் மாநிலம், கோராக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஆறு நாட்களில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
மாநில அரசின் இந்த மெத்தனப்போக்கை கண்டித்து பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இவ்விவகாரத்தில் விளக்கம் வரும் 29-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு உத்தரப்பிரதேசம் மாநில அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், புதுடெல்லியில் இருந்து இன்று லக்னோ நகருக்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 70 பச்சிளம் தளிர்கள் பலியான கோரக்பூர் அரசு மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் செல்கிறார். அங்கு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
இதற்கிடையில், கோரக்பூர் நகரில் உள்ள அந்தாயாரி பாக் பகுதியில் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தீவிர தூய்மை மற்றும் சுகாதார இயக்கத்துக்கான பிரசாரத்தை இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது, 71 குழந்தைகள் பலியான ஆஸ்பத்திரியை பார்வையிடவரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள யோகி ஆதித்யாநாத் கோரக்பூர் என்ன, பிக்னிக் ஸ்பாட்டா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அரச குமாரர் (ராகுல் காந்தி) தற்போது லக்னோ நகரில் முகாமிட்டுள்ளார். டெல்லியில் இருக்கும் அவருக்கு இந்த சுகாதார விழிப்புணர்வு இயக்கத்தின் அவசியமும் முக்கியத்துவமும் தெரியாது. கோரக்பூரை அவர்கள் பிக்னிக் ஸ்பாட்டாக மாற்றுவதை எங்களால் அனுமதிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் கோரக்பூர் மக்களின் தன்மானத்துக்கும் சவால் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முதலில் கொடிய நோய்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்களை செய்ய முன்வர வேண்டும். முந்தைய அரசுகளின் மெத்தனப்போக்காலும், சுயநலத்தாலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல், மாநில மக்களிடையே சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படாமல் போனதாக அவர் குற்றம்சாட்டினார்.

Next Story
×