என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பீகார்: நிதிஷ்குமார், சரத் யாதவ் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம்
Byமாலை மலர்19 Aug 2017 4:59 AM GMT (Updated: 19 Aug 2017 4:59 AM GMT)
பீகார் மாநிலம் பாட்னாவில், நிதிஷ்குமார் மற்றும் சரத் யாதவ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்தார்.
லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ., ஊழல் புகார் வழக்குப்பதிவு செய்ததையடுத்து, லாலுவின் மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி பதவி விலகவேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
தேஜஸ்வி பதவி விலக மறுத்ததால், நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். அவரது முடிவுக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் அதிருப்தி தெரிவித்தார்.
இதற்கிடையே, எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் சரத் யாதவ் ஈடுபட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை சரத் யாதவ் நடத்தினார்.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ்குமார் மற்றும் சரத் யாதவ் ஆகியோர் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.
இதனால் பாட்னா நகரம் முழுவதிலும் நிதிஷ்குமார் ஆதரவாளர்களும், சரத் யாதவ் ஆதரவாளர்களும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களால் பாட்னாவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story
×