என் மலர்

  செய்திகள்

  10, 2, 1 ரூபாய் நாணயங்கள் கடைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை: மாநிலங்களவையில் நிதிஷ் எம்.பி. பேச்சு
  X

  10, 2, 1 ரூபாய் நாணயங்கள் கடைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை: மாநிலங்களவையில் நிதிஷ் எம்.பி. பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கைக்கு பிறகு 10, 2, 1 ரூபாய் நாணயங்கள் கடைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. தெரிவித்தார்.
  புதுடெல்லி:

  பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்து கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது. புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.

  இதனிடையே, பண மதிப்பிழக்க நடவடிக்கையின் போது, 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற தவறான தகவல் பரவியது. அப்படி எதுவும் செய்யவில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்த போதும் கடைகளில், பேருந்துகளில் 10 ரூபாய் நாணயம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

  இந்நிலையில், ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கைக்கு பிறகு 10, 2, 1 ரூபாய் நாணயங்கள் கடைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. தெரிவித்தார்.

  கேள்வி நேரத்தின் போது இது தொடர்பாக பேசிய எம்பி. அலி அன்வர் அன்சாரி, ”நாட்டின் சில பகுதிகள் ரூ.10 உள்ளிட்ட நாணயங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சில வங்கிகள் அவற்றை வழங்கி இருந்தாலும்  கூட  நாணயங்களை வாங்குவதில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஏழை மக்கள்.” என்றார். 
  Next Story
  ×