என் மலர்

  செய்திகள்

  பீகாரில் வாக்கிங் சென்ற இளம்பெண் கொலை- மர்ம நபர்கள் வெறிச்செயல்
  X

  பீகாரில் வாக்கிங் சென்ற இளம்பெண் கொலை- மர்ம நபர்கள் வெறிச்செயல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பீகாரில் காணாமல் போன இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
  பாட்னா:

  பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள பகட்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அனில் குமார் சின்கா. இவரின் மகள் சிம்மி சலோனி(20). இன்று காலை வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிம்மி வராததால் பெற்றோர் அருகில் உள்ள இடங்களுக்கு சென்று தேடியுள்ளனர். அங்கும் கிடைக்காததால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

  இதனை அடுத்து போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், அப்பெண் நடைபயிற்சி செய்யும் இடத்திற்கு சென்று பார்த்த போது சிம்மி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டனர்.

  மர்மநபர்கள் சிம்மியை கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கலாம். கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. விசாரணை நடைப்பெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

  Next Story
  ×