search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. எம்.பி. மீது திரிணாமுல் காங். தொண்டர்கள் தாக்குதல்: கார் கண்ணாடி உடைப்பு
    X

    மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. எம்.பி. மீது திரிணாமுல் காங். தொண்டர்கள் தாக்குதல்: கார் கண்ணாடி உடைப்பு

    மேற்கு வங்கத்தில் கட்சி நிகழ்ச்சிக்காக சென்ற பா.ஜ.க. எம்.பி.யின் கார் மீது, திரிணாமுல் தொண்டர்கள் செங்கலால் திடீர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கல்னா (மேற்கு வங்கம்) :

    மேற்கு வங்க மாநிலம் ஹவுரா தொகுதி பா.ஜ.க. எம்பியாக இருப்பவர் ஜார்ஜ் பேக்கர். சினிமா நடிகர் ஆவார். இவர் இன்று காலை புத்வான் மாவட்டத்தில் உள்ள கல்னா நகருக்கு கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார். மற்றொரு காரில் கட்சி தொண்டர்களும் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

    சிறிது நேரத்தில் யாரும் இல்லாத இடத்தில் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வழிமறித்தனர். அவர்களது கார்களை நோக்கி செங்கலை வீசினர். இந்த தாக்குதலில் ஜார்ஜ பேக்கரும், அவருடன் சென்ற நான்கு பேரும் காயமடைந்தனர்.

    இது குறித்து ஜார்ஜ் பேக்கர் கூறுகையில், ‘‘முன்னால் சென்ற கட்சியினரை சிலர் தாக்குவதை கண்டு நான் காரை விட்டு இறங்கினேன்.  அதை கண்ட சிலர் என்னையும் தாக்க தொடங்கினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்னா போலீசில் புகார் அளித்துள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.

    பா.ஜ,க எம்.பி மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ் குற்றம் சாட்டினார்.

    ஆனால், பாஜவின் புகாருக்கு மறுப்பு தெரிவித்த திரிணாமுல் கட்சியின் மாவட்ட தலைவரும், மாநில மந்திரியுமான ஸ்வபன் தேவ்நாத் கூறுகையில், ‘‘இதன்மூலம் அவர்களது உள்கட்சி பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×