search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் மனு: 6 மாத தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை
    X

    நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் மனு: 6 மாத தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை

    நீதிபதி கர்ணனை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தவை நிறைவேற்றும்படி மேற்கு வங்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கொல்கத்தாவில் இருந்து தனிப்படை போலீசார், சென்னை வந்து நீதிபதி கர்ணனை கைது செய்ய முயன்றனர்.

    ஆனால், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த நீதிபதி கர்ணன், அங்கிருந்து வெளியேறினார். அவர் காளஹஸ்திக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருப்பதாகவும், மாலையில் சென்னை திரும்புவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அங்கு சென்ற தனிப்படை போலீசாரால் அவர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை.

    அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கர்ணன், யார்-யாரிடமெல்லாம் நேற்று செல்போனில் பேசி இருக்கிறார் என்பது பற்றிய பட்டியலை போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். இவர்கள் மூலமாக கர்ணனை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.



    இந்நிலையில், நீதிபதி கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெறும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×