search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தமின்றி தயாராகும் மோட்டோ சி சீரிஸ்: ஜூன் மாதம் வெளிவரும் என தகவல்
    X

    சத்தமின்றி தயாராகும் மோட்டோ சி சீரிஸ்: ஜூன் மாதம் வெளிவரும் என தகவல்

    மோட்டோரோலாவின் மோட்டோ சி ஸ்மார்ட்போன் ஜூன் மாதம் வெளியாகும் என சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    மோட்டோ ஜி சீரிஸ் போன்களை தொடர்ந்து மோட்டோ போன்களின் அடுத்த திட்டம் சி சீரிஸ் தான் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மோட்டோ சி மற்றும் மோட்டோ சி பிளஸ் என இரண்டு ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாத வாக்கில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது. 

    இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வழங்கப்படாத நிலையில், பட்ஜெட் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் மோட்டோ சி சீரிஸ் போன்களை லெனோவோ நிறுவனம் ஜூன் மாதம் வெளியிட இருப்பதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் புதிய மோட்டோ சி சீரிஸ் போன்கள் ரெட்மி 4A போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  



    முன்னதாக மோட்டோ சி மற்றும் மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து புதிய மோட்டோ சி சீரிஸ் ஜூன் மாத வாக்கில் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது. புதிய போன்கள் சார்ந்து எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில் ஏற்கனவே வெளியாகியுள்ள அம்சங்களில் இவை பட்ஜெட் போன்களாக இருக்கும் என்றே தெரிவித்துள்ளன.

    மோட்டோ சி போன்களில் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் மற்றும் 5.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் குவால்காம் அல்லது மீடியாடெக் சிப்செட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இத்துடன் 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மோட்டோ சி பிளஸ் மாடலில் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகின்றது.  

    புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் தொழில்நுட்பம் மற்றும் 2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்றும் 3800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
    Next Story
    ×