என் மலர்
தேர்தல் செய்திகள்
மக்களை பற்றி சிந்திக்காமல் உருவானது தான் அதிமுக - பாமக கூட்டணி என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார். #SarathKumar #ADMK #PMK
ஆத்தூர்:
சேலம் கிழக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அலுவலகத்தை கட்சி தலைவர் சரத்குமார் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நான் அரசியலுக்கு வந்து 23 வருடங்கள் ஆகிறது. அ.தி.மு.க., தி.மு.க.வுக்காக வாக்குகளை சேகரித்து வந்துள்ளேன். தற்போது முதல் முறையாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்தேன். நீங்கள் எங்கள் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும்.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் கூட்டணி சேர்ந்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழக நிதி அமைச்சர் பற்றியும், தமிழக அரசை பற்றியும் குறை கூறி வந்தனர். அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி மக்களை பற்றி சிந்திக்காமல் தங்களை மட்டுமே சிந்தித்து உருவான கூட்டணி. இதனால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
அதேபோல் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் அமைத்துள்ள கூட்டணியானது, அ.தி.மு.க. அமைத்த கூட்டணி போன்றது தான்.
தமிழகம் வளர்ச்சி அடைய, ஊழல் இல்லா நல்லாட்சி மலர, புதிய மாற்றம் ஏற்பட ஒத்த கருத்துடைய கட்சிகள், தே.மு.தி.க.வாக இருந்தாலும் சரி, நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சியை நோக்கி செல்கிறோம். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #SarathKumar #ADMK #PMK

கஜா புயல் பாதித்த தமிழகத்தை வந்து பார்க்காத பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் வந்ததும் அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்தது. இதனால் தான் நாங்கள் தனியாக நிற்பது என்று முடிவு செய்துள்ளோம்.

விழாவில் சரத்குமார் பேசிய காட்சி.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் கூட்டணி சேர்ந்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழக நிதி அமைச்சர் பற்றியும், தமிழக அரசை பற்றியும் குறை கூறி வந்தனர். அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி மக்களை பற்றி சிந்திக்காமல் தங்களை மட்டுமே சிந்தித்து உருவான கூட்டணி. இதனால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
அதேபோல் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் அமைத்துள்ள கூட்டணியானது, அ.தி.மு.க. அமைத்த கூட்டணி போன்றது தான்.
தமிழகம் வளர்ச்சி அடைய, ஊழல் இல்லா நல்லாட்சி மலர, புதிய மாற்றம் ஏற்பட ஒத்த கருத்துடைய கட்சிகள், தே.மு.தி.க.வாக இருந்தாலும் சரி, நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சியை நோக்கி செல்கிறோம். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #SarathKumar #ADMK #PMK
காஞ்சிபுரம் தொகுதியில் ம.தி.மு.க. கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. #LSPolls #MDMK #MallaiSathya
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அந்த தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட விரும்புகிறார். அந்த தொகுதியை கேட்டு காங்கிரஸ் வற்புறுத்துவதால் தி.மு.க. தரப்பிலும் வேறு தொகுதியை தேர்வு செய்யும் படி ம.தி.மு.க.விடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து காஞ்சிபுரம் தொகுதியை ம.தி.மு.க. கேட்டுள்ளது. இந்த தொகுதியில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. #LSPolls #MDMK #MallaiSathya

ஈரோடு அல்லது காஞ்சிபுரம் தனி தொகுதியை ம.தி.மு.க. கேட்டு வருகிறது. ஈரோடு தொகுதியில் போட்டியிட கணேசமூர்த்தி விரும்புவதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட விரும்புகிறார். அந்த தொகுதியை கேட்டு காங்கிரஸ் வற்புறுத்துவதால் தி.மு.க. தரப்பிலும் வேறு தொகுதியை தேர்வு செய்யும் படி ம.தி.மு.க.விடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து காஞ்சிபுரம் தொகுதியை ம.தி.மு.க. கேட்டுள்ளது. இந்த தொகுதியில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. #LSPolls #MDMK #MallaiSathya
அன்புமணி ராமதாஸ் எம்.பி.யாக உள்ள தர்மபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. #LSPolls #PMK #SowmiyaAnbumani
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிக்கல் எதுவும் இல்லாமல் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால் பா.ம.க.வினர் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டனர். எந்தெந்த தொகுதிகள் என்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிடாவிட்டாலும் தலைவர்கள் மட்டத்தில் ஓரளவு முடிவு செய்து விட்டனர்.

தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி தற்போது எம்.பி.யாக இருக்கிறார். இந்த முறை சவுமியா அன்புமணி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. சவுமியா அன்புமணி நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் ‘பசுமைத் தாயகம்’ என்ற அமைப்பின் மூலம் எல்லா பகுதியிலும் அறிமுகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல், அரக்கோணம், விழுப்புரம், கடலூர் ஆகிய 6 தொகுதிகளும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
முன்னாள் மத்திய மந்திரியான ஏ.கே.மூர்த்தி தொடர்ந்து 2 முறை செங்கல்பட்டு தொகுதி எம்.பி.யாக இருந்தார். அதன்பிறகு ஆரணியிலும், ஸ்ரீபெரும்புதூரிலும் போட்டியிட்டு வெற்றிப் பெறவில்லை.
இந்த முறை அரக்கோணம் தொகுதியில் களமிறக்கப்படுகிறார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு துணை பொதுச்செயலாளர் கே.என்.சேகர், வைத்திலிங்கம், திண்டுக்கல் தொகுதிக்கு திலகபாமா, விழுப்புரத்துக்கு வடிவேல் ராவணன், கடலூருக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மத்திய சென்னைக்கு இரா.சகாதேவன், ஜான்பால் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.
வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் இவர்களிடம் அந்தந்த தொகுதிகளில் எதிரணி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் செல்வாக்கு, பணபலம் ஆகியவை பற்றி ராமதாஸ் விசாரித்து வருகிறார். #LSPolls #PMK #SowmiyaAnbumani

அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரடியாகவே அழைத்து விசாரித்து வருகிறார்.

தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி தற்போது எம்.பி.யாக இருக்கிறார். இந்த முறை சவுமியா அன்புமணி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. சவுமியா அன்புமணி நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் ‘பசுமைத் தாயகம்’ என்ற அமைப்பின் மூலம் எல்லா பகுதியிலும் அறிமுகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல், அரக்கோணம், விழுப்புரம், கடலூர் ஆகிய 6 தொகுதிகளும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
முன்னாள் மத்திய மந்திரியான ஏ.கே.மூர்த்தி தொடர்ந்து 2 முறை செங்கல்பட்டு தொகுதி எம்.பி.யாக இருந்தார். அதன்பிறகு ஆரணியிலும், ஸ்ரீபெரும்புதூரிலும் போட்டியிட்டு வெற்றிப் பெறவில்லை.
இந்த முறை அரக்கோணம் தொகுதியில் களமிறக்கப்படுகிறார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு துணை பொதுச்செயலாளர் கே.என்.சேகர், வைத்திலிங்கம், திண்டுக்கல் தொகுதிக்கு திலகபாமா, விழுப்புரத்துக்கு வடிவேல் ராவணன், கடலூருக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மத்திய சென்னைக்கு இரா.சகாதேவன், ஜான்பால் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.
வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் இவர்களிடம் அந்தந்த தொகுதிகளில் எதிரணி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் செல்வாக்கு, பணபலம் ஆகியவை பற்றி ராமதாஸ் விசாரித்து வருகிறார். #LSPolls #PMK #SowmiyaAnbumani
20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர்கள் 11-ந்தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElection #DMK
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிவடைந்து விட்டன. தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதையடுத்து தி.மு.க.வில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இன்று மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

இதையடுத்து 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர்கள் 11-ந்தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. சார்பில் கீழ்க்கண்டவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர்கள் விவரம் வருமாறு:-
1. கனிமொழி - தூத்துக்குடி
2. தயாநிதி மாறன்- மத்திய சென்னை
3. டி.ஆர்.பாலு- ஸ்ரீபெரும்புதூர்
4. ஆ.ராசா-நீலகிரி
5. தமிழச்சி தங்கபாண்டியன்- தென்சென்னை
6. துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்-வேலூர்
7. ஆற்காடு வீராசாமி மகன் டாக்டர் கலாநிதி- வடசென்னை
8. பொன்முடி மகன் கவுதம் சிகாமணி- கள்ளக்குறிச்சி
9. எ.வ.வேலு மகன் கம்பன்- திருவண்ணாமலை. #ParliamentElection #DMK

இதையடுத்து தி.மு.க.வில் வேட்பாளர்கள் நேர்காணல் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. 21 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் நாளை (9-ந்தேதி)யும், பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் 10-ந்தேதியும் நேர்காணல் நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்துகிறார்.

இதையடுத்து 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர்கள் 11-ந்தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. சார்பில் கீழ்க்கண்டவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர்கள் விவரம் வருமாறு:-
1. கனிமொழி - தூத்துக்குடி
2. தயாநிதி மாறன்- மத்திய சென்னை
3. டி.ஆர்.பாலு- ஸ்ரீபெரும்புதூர்
4. ஆ.ராசா-நீலகிரி
5. தமிழச்சி தங்கபாண்டியன்- தென்சென்னை
6. துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்-வேலூர்
7. ஆற்காடு வீராசாமி மகன் டாக்டர் கலாநிதி- வடசென்னை
8. பொன்முடி மகன் கவுதம் சிகாமணி- கள்ளக்குறிச்சி
9. எ.வ.வேலு மகன் கம்பன்- திருவண்ணாமலை. #ParliamentElection #DMK
தே.முதி.க. உள்பட மேலும் பல கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். #ADMK #OPanneerselvam #DMDK #LSPolls
தேனி:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தே.மு.தி.க.வையும் கூட்டணியில் சேர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த சுதீஷ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் நிறைவு பெறும் என்றார்.
இதனிடையே நேற்று மாலை தேனியில் நடந்த அரசு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில்:-
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. மட்டுமல்ல, மேலும் பல கட்சிகள் இதற்கான வாய்ப்புகள் உள்ளது. தே.மு.தி.க.வுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி ஓரிரு நாளில் இறுதி வடிவம் பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #OPanneerselvam #DMDK #LSPolls

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட 15 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. #ParliamentElection #Congress #FirstList #SoniaGandhi #RahulGandhi
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் தேதி அட்டவணை இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படலாம் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 பேர் கொண்ட
முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 15 பேர் கொண்ட் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 11 பேரு ம், குஜராத் மாநிலத்தில் 4 பேரும் அடங்குவர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உபியின் ரேபரேலி தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர் என தெரிவித்துள்ளது. #ParliamentElection #Congress #FirstList #SoniaGandhi #RahulGandhi
பாராளுமன்ற தேர்தலுடன் 21 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார். #MKStalin #DMK
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் கூறி இருப்பதாவது:-
கழக வரலாற்றில் தலைவர் கலைஞர் நம்மிடையே இல்லாமல் நாம் சந்திக்கின்ற முதல் தேர்தல் களம் இது. இவ்வளவு பெரிய சுமையைத் தாங்குவது அவ்வளவு எளிதானதா என எண்ணிப் பார்த்தபோது, தலைவர் கலைஞர் அனுதினமும் அன்புடனும் அக்கறையுடனும் ஊட்டிய ஆழமான கொள்கை உணர்வுடன் நாங்கள் என்றும் உறுதியுடன் இருக்கிறோம் என கோடிக்கணக்கான அவரது உடன்பிறப்புகளான நீங்கள் தரும் உற்சாகத்தாலும் தெம்பாலும், உங்கள் இதயம் பெருக காட்டுகின்ற பாசத்தாலும் உங்களில் ஒருவனான எனக்கு இந்த சுமையும் கூட சுகமாகி விடுகிறது.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதைப் போல, ஒருகோடி உடன்பிறப்புகள் உடையான் எந்த சவாலையும் எதிர்கொள்வான், வெல்வான் என்பது கழகம் சொல்லும் உண்மையன்றோ! தலைவர் கலைஞர் உயிருடன் இருந்தால், இன்று நாடு இருக்கும் நிலையில் என்ன முறையில் மக்களவைத் தேர்தல் களத்தைச் சந்திப்பாரோ அதே வழியில் மதச்சார்பற்ற மக்கள் நலன் காக்கும் மாபெரும் முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, பிரதமர் வேட்பாளர் யார் என்பதைத் தெளிவாக முன்மொழிந்து தேர்தல் களத்தைச் சந்திக்க கழகம் ஆயத்தமாகிவிட்டது.
தி.மு.க.வின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியின் நோக்கம், பாசிச ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியாவையும், அந்தப் பாசிசத்தின் காலில் விழுந்து காலபூஜை செய்து கிடக்கும் அடிமைகளிடமிருந்து தமிழ்நாட்டையும் மீட்டுருவாக்கம் செய்வதுதான். அதற்காக ஒரே நோக்கம், ஒரே சிந்தனை-சொல் செயல் என ஒன்றுபட்டு இணைந்து அமைந்திருக்கும் நமது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டு, அவர்களுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, அந்தந்த கட்சிகளுக்கும் உரிய தொகுதிகளுக்கான பங்கீடு முழுமையாக நடந்து நிறைவேறியிருக்கிறது.
தலைவர் கலைஞர் எப்படி கழகத்தின் சார்பில் குழுக்கள் அமைத்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்திடுவாரோ அதே நடைமுறைப்படி தொகுதிப் பங்கீடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
தொகுதி உடன்பாடு தொடர்பான எந்தப் பேச்சு வார்த்தையும் ஊர் அடங்கிய பிறகு யாருக்கோ சொந்தமான மர்ம மாளிகையில் திரைமறைவில் நடக்கவில்லை. நட்சத்திர ஓட்டலில் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை. பொதுக்கூட்ட மேடை ஏறுவதற்கு முன்பாக ஒப்பந்தம் போட்டு எப்படியாவது இழுத்து வந்து மேடையேற்ற வேண்டும் என்று திட்டமிடப்படவில்லை. கட் அவுட்டை வைப்பதும் எடுப்பதுமாக கேலிக்கூத்துகள் இல்லை.
ஏனெனில், கழகக் கூட்டணி என்பது ஊழல் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக் கொண்டு ரெய்டு பயம் காட்டி மிரட்டி அமைக்கப்பட்ட செயற்கைக் கூட்டணி அல்ல. மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள மக்கள் விரோத ஜனநாயக விரோத ஆட்சியாளர்களை விரட்டி அடிக்கின்ற கூட்டணி.
அதனால்தான் நிதானமாகப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தன. உரிய வகையில் உவப்பான சூழலில் உடன்பாடுகள் ஏற்பட்டன.
இந்திய தேசிய காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 1 மக்களவை தொகுதி 1 மாநிலங்களவைத் தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி, அதுபோலவே போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி என 20 தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதென ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன.
தொகுதிப் பங்கீட்டில் கழகத்தின் தலைமையிலான கூட்டணியே முந்தி நின்றது போல, களப்பணியிலும் அது தரப்போகிற வெற்றியிலும் நமது அணியே முந்தி நிற்கும் முதன்மை பெறும் முழுமையாக வெல்லும் என்பது திண்ணம்.
அதற்கு அச்சாரமாகத்தான், கூட்டணி ஒப்பந்தங்கள் நிறைவடைந்த மறுநாள் மார்ச் 6-ம் நாள் விருதுநகர் மண்ணில் கழகத்தின் சார்பில் நடந்த தமிழகத்தின் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரணியில் திரண்டிருந்தது மகத்தான மக்கள் வெள்ளம். கடல் காணா விருதுநகரில் மனிதத் தலைகளே கடல் அலைகளாக அற்புதக் காட்சி அளித்து அழிக்க முடியாத சாட்சிகளாக நின்றன. பெருந்திரளான உடன்பிறப்புகள், தோழமைக் கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் எனத் திரண்டிருந்த கூட்டம், 40 தொகுதிகளின் வெற்றிச் செய்தியை விளம்பிடும் வகையில் இருந்தது.
அதே நாளில் பிரதமர் மோடி பங்கேற்ற கட்டாயக் கூட்டணியின் பொருந்தாக் கூட்டணியின் பொதுக் கூட்டம் சென்னை அருகே நடைபெற்றது. பிரதமர், முதல்வர், துணை முதல்வர், மக்களவை துணை சபாநாயகர் எனப் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருப்பவர்களே, பொறுப்பை மறந்து மன சாட்சியைத் துறந்து பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டதை நாடு பார்த்தது; நகைத்தது.

இத்தனையையும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் மறக்காத நிலையில், இவர்கள் எல்லாவற்றையும் மறந்தும் மறைத்தும் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என அள்ளி விடுகிறார்களே என நாடு சிரித்தது. நீட் தேர்வினால் உயிர் பறிக்கப்பட்ட அனிதா முதல் கஜா புயலால் வாழ்விழந்த டெல்டா மாவட்ட மக்கள் வரை ஒருவரையும் மதிக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு மாநிலத்தை ஆளும் அடிமைகளும் அவர்களின் திடீர் கூட்டாளிகளும் கவரி வீசுகிறார்களே என மக்கள் எள்ளி நகையாடினார்கள். அதைத்தான் விருதுநகர் பேரணியில் எடுத்துரைத்தேன். ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கு இன்னும் ஆதாரங்கள் ஏராளமானவை இருக்கின்றன. அத்தனையும் தேர்தல் களத்தில் அணிவகுத்து வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
ஜனநாயகம் காக்கின்ற பெரும்பணியில் இருக்கின்ற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் எனும் சுயாட்சிமிக்க அமைப்பு, ஆட்சியாளர்களின் அதிகார மீறல்களுக்கு அடிபணியாது என்கிற நம்பிக்கை இன்னமும் மிச்சமிருக்கிறது. அந்த நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டுமென்றால், மக்களவைத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட வேண்டும். 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் வழங்கவிருக்கும் ஜனநாயகத் தீர்ப்பு மத்தியில் ஆளப்போவது யார் என்பதை தீர்மானிப்பது மட்டுமல்ல, மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திடமாக இருக்கிறார்கள். தங்களை வாட்டி வதைக்கின்ற மத்திய மாநில ஆட்சியாளர்களை விரட்டி அடிக்கவேண்டும் என்பதில் வேகமாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள்.
மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களின் கரங்களில் இருக்கிறது. 8 ஆண்டுகளாகக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. நம்கையில் அதிகாரம் இல்லை. ஆனாலும், ஆட்சியாளர்கள் தங்கள் திறனைக் காட்டத்துப்பின்றி நம் மீது சகதி வாரி அடிக்கப் பார்க்கிறார்கள். ஏனென்றால், அவதூறுகளைப் பரப்பியாவது ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பதவி வெறிதான் அவர்களைப் பொய்யிலே ஊற வைத்த புளுகு மூட்டைகளாக்கியிருக்கிறது.
கொள்ளையடிப்பதற்காக ஆட்சி நடத்துவோரின் எண்ணத்தை முறியடித்திட, கழகம் மீண்டும் அரியணை ஏறிட, அதன் மூலமாக ஊராட்சிகள் தொடங்கி மாநகராட்சிகள் வரை அனைத்து நிலைகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திட, தமிழ்நாடு செழித்திட கழகத்தினர் ஒவ்வொருவரும் உறுதியேற்றுப் பணியாற்றிட வேண்டும்.
20 தொகுதிகளில் தி.மு.க. நிற்கிறது. மீதி 20 தொகுதிகளிலும் தி.மு.கழகம் தான் நிற்கிறது. அந்த சீரிய எண்ணம்தான், தலைவர் கலைஞர் நமக்கு ஊட்டியுள்ள தோழமை உணர்வு. 40 தொகுதிகளிலும் நமது கூட்டணியை எதிர்த்து நிற்பவர்கள் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் அவர்களின் பங்குதாரர்கள். அந்த ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் நுழைவதற்கு ஒரு தொகுதியிலும் இடம் கொடுத்துவிடக் கூடாது.
அதுபோலவே, சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் 21 தொகுதிகளிலும் நாம் பெறப் போகும் வெற்றி, ஒவ்வொரு வாழ்விலும் உதயசூரியனின் வெளிச்சக் கதிர்களைப் பாய்ச்சப் போகிற வெற்றி. கதிரொளி பாய்ந்தால் வளம் பெருகும். நாடு ஒளி மயமாகும்.
அந்த உயரிய எண்ணத்தோடு, ஓயாத உழைப்போடு உறுதியான உள்ளத்தோடு பணியாற்றிடுவோம். களம் அழைக்கிறது; காலம் நமக்கானது. தலைவர் கலைஞர் காட்டிய வழியில் ஈட்டிடுவோம் வெற்றியை! நாற்பதும் நமதாகட்டும்! நாடு நலம் பெறட்டும்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK

சில நாட்கள் முன்பாகத் தானே ஒருவர், தமிழ்நாட்டை பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று பாராளுமன்றத்திலேயே பேசினார். இன்னொருவர், மத்திய அரசு நிதி வழங்காததால் மாநில அரசு கடன் சுமையில் தத்தளிக்கிறது என சட்டப்பேரவையில் தெரிவித்தார். இன்னொருவர் தலைமையிலான அரசின் தொழில் குறிப்புதானே, ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சிறு குறு தொழில்கள் முடங்கி விட்டன எனப் பேரவையிலேயே தெரிவித்தது.

இத்தனையையும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் மறக்காத நிலையில், இவர்கள் எல்லாவற்றையும் மறந்தும் மறைத்தும் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என அள்ளி விடுகிறார்களே என நாடு சிரித்தது. நீட் தேர்வினால் உயிர் பறிக்கப்பட்ட அனிதா முதல் கஜா புயலால் வாழ்விழந்த டெல்டா மாவட்ட மக்கள் வரை ஒருவரையும் மதிக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு மாநிலத்தை ஆளும் அடிமைகளும் அவர்களின் திடீர் கூட்டாளிகளும் கவரி வீசுகிறார்களே என மக்கள் எள்ளி நகையாடினார்கள். அதைத்தான் விருதுநகர் பேரணியில் எடுத்துரைத்தேன். ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கு இன்னும் ஆதாரங்கள் ஏராளமானவை இருக்கின்றன. அத்தனையும் தேர்தல் களத்தில் அணிவகுத்து வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
ஜனநாயகம் காக்கின்ற பெரும்பணியில் இருக்கின்ற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் எனும் சுயாட்சிமிக்க அமைப்பு, ஆட்சியாளர்களின் அதிகார மீறல்களுக்கு அடிபணியாது என்கிற நம்பிக்கை இன்னமும் மிச்சமிருக்கிறது. அந்த நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டுமென்றால், மக்களவைத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட வேண்டும். 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் வழங்கவிருக்கும் ஜனநாயகத் தீர்ப்பு மத்தியில் ஆளப்போவது யார் என்பதை தீர்மானிப்பது மட்டுமல்ல, மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திடமாக இருக்கிறார்கள். தங்களை வாட்டி வதைக்கின்ற மத்திய மாநில ஆட்சியாளர்களை விரட்டி அடிக்கவேண்டும் என்பதில் வேகமாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள்.
மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களின் கரங்களில் இருக்கிறது. 8 ஆண்டுகளாகக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. நம்கையில் அதிகாரம் இல்லை. ஆனாலும், ஆட்சியாளர்கள் தங்கள் திறனைக் காட்டத்துப்பின்றி நம் மீது சகதி வாரி அடிக்கப் பார்க்கிறார்கள். ஏனென்றால், அவதூறுகளைப் பரப்பியாவது ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பதவி வெறிதான் அவர்களைப் பொய்யிலே ஊற வைத்த புளுகு மூட்டைகளாக்கியிருக்கிறது.
கொள்ளையடிப்பதற்காக ஆட்சி நடத்துவோரின் எண்ணத்தை முறியடித்திட, கழகம் மீண்டும் அரியணை ஏறிட, அதன் மூலமாக ஊராட்சிகள் தொடங்கி மாநகராட்சிகள் வரை அனைத்து நிலைகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திட, தமிழ்நாடு செழித்திட கழகத்தினர் ஒவ்வொருவரும் உறுதியேற்றுப் பணியாற்றிட வேண்டும்.
20 தொகுதிகளில் தி.மு.க. நிற்கிறது. மீதி 20 தொகுதிகளிலும் தி.மு.கழகம் தான் நிற்கிறது. அந்த சீரிய எண்ணம்தான், தலைவர் கலைஞர் நமக்கு ஊட்டியுள்ள தோழமை உணர்வு. 40 தொகுதிகளிலும் நமது கூட்டணியை எதிர்த்து நிற்பவர்கள் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் அவர்களின் பங்குதாரர்கள். அந்த ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் நுழைவதற்கு ஒரு தொகுதியிலும் இடம் கொடுத்துவிடக் கூடாது.
அதுபோலவே, சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் 21 தொகுதிகளிலும் நாம் பெறப் போகும் வெற்றி, ஒவ்வொரு வாழ்விலும் உதயசூரியனின் வெளிச்சக் கதிர்களைப் பாய்ச்சப் போகிற வெற்றி. கதிரொளி பாய்ந்தால் வளம் பெருகும். நாடு ஒளி மயமாகும்.
அந்த உயரிய எண்ணத்தோடு, ஓயாத உழைப்போடு உறுதியான உள்ளத்தோடு பணியாற்றிடுவோம். களம் அழைக்கிறது; காலம் நமக்கானது. தலைவர் கலைஞர் காட்டிய வழியில் ஈட்டிடுவோம் வெற்றியை! நாற்பதும் நமதாகட்டும்! நாடு நலம் பெறட்டும்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK
கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் யார்? என்பது பற்றி செயற்குழுவும், ராகுல்காந்தியும் தான் முடிவு செய்வார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார். #KSAlagiri #Congress
நாகர்கோவில்:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். குமரி மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணியினரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
ராகுல்காந்தி வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் விஜயதா திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
முன்னதாக கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
ராகுல்காந்தி வருகிற 13-ந் தேதி குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் மற்றும் பொதுவுடமை கட்சி தலைவர்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாக இந்த கூட்டம் அமையும்.
பிரதமர் மோடி நேற்று சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது காமராஜரை காங்கிரஸ் கட்சி இழிவுபடுத்தி விட்டதாக கூறி உள்ளார். காமராஜர் மனித நேயம் மிக்கவர். அவர் நல்ல மனிதர். பெருமை மிகுந்த தலைவர். அவரை காங்கிரஸ் கட்சி பெருமைப்படுத்தி உள்ளது. அவர் காந்தி, ராஜாஜி ஆகியோருடன் நட்பாக இருந்தார். அந்த நட்பு எப்படிப்பட்டது என்பது பற்றி அனைவருக்கும் தெரியும்.
அதேசமயம் மோடி தனது கட்சியை சேர்ந்த அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பது நாட்டுக்கே தெரியும்.
தமிழகத்தில் புயலால் பாதிப்பு ஏற்பட்டபோது தமிழக முதல்-அமைச்சர், மத்திய அரசிடம் ரூ.1½ லட்சம் கோடி நிவாரண நிதி கேட்டார். பா.ம.க. தலைவரும் அதை வலியுறுத்தி மத்திய அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால் மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி தான் நிவாரணம் வழங்கியது.
சென்னையில் நடந்த கூட்டத்தில் மோடியுடன் அவர்களும் பங்கேற்று உள்ளனர். அவர்களது கூட்டணி சர்வாதிகாரமான கூட்டணியாக அமைந்துள்ளது. விவசாயிகள், ஏழை மக்கள் மேம்பாட்டுக்கு மோடி அரசு எதுவுமே செய்யவில்லை.
இந்தியாவிலேயே தமிழகம் தான் மாபெரும் தலைவர்களை கொண்ட மாநிலமாக இருந்தது. தற்போது எந்த கொள்கையும் இல்லாதவர்கள் தான் இங்கு உள்ளனர். மாட்டை சந்தையில் விலை பேசுவது போன்ற நிலை தான் நிலவுகிறது. கூட்டணிக்காக நடைபெறும் இதையெல்லாம் இளைஞர் சமுதாயம் புரிந்து கொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டும். காமராஜர் ஆட்சி விரைவில் அமையும்.

கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் யார்? என்பது பற்றி செயற்குழுவும், ராகுல்காந்தியும் தான் முடிவு செய்வார்கள். மாநில கட்சிகள் வளர்ச்சி அடைந்துள்ளதால் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. பா.ஜனதாவுக்கு அவர்களது கொள்கைகள் தான் பலவீனம். மனிதர்களை பிளவுபடுத்தி பார்ப்பது தான் பா.ஜனதாவின் கொள்கை.
ராணுவ அமைச்சகத்தில் இருந்து கோப்புகள் மாயமாகி உள்ளது. அதை கூட பாதுகாக்க முடியாத மோடி அரசு இந்தியாவை பாதுகாக்க முடியுமா? இதை மக்கள் நம்புகிறார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத், முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, கட்சியின் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. குமரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மயூரா ஜெயக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ் குமார், ரூபி மனோகரன் உள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #KSAlagiri #Congress

நடிகர் ரஜினிகாந்த் ஏதேதோ அரசியல் செய்கிறார். அவரை சினிமாவில் மட்டும் தான் பார்க்க முடியும்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி கதவு திறந்திருப்பதாகவும், தேமுதிகவுக்காக காத்திருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #MinisterJayakumar #LSPolls
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலுக்காக அதிமுகவுடன் தேமுதிக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும், கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. அநேகமாக நாளை கூட்டணி ஒப்பந்தம் ஏற்படும் என தெரிகிறது. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, திமுகவுடனும் தேமுதிக நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். இந்த தகவல்களை துரைமுருகன் வெளியிட்டது, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

கூட்டணி தொடர்பாக தேமுதிக பேச்சு நடத்தியதை திமுக வெளியே சொல்லியிருக்க கூடாது. அரசியல் நாகரிகமின்றி திமுக வெளிப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #LSPolls

தேமுதிகவுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடர்கிறது. எங்களுக்கான கூட்டணி கதவை மூடவில்லை. தேமுதிகவுக்காக காத்திருக்கிறோம். அதிமுக எனும் போயிங் விமானத்தில் ஏறிய அனைவருக்கும் சீட் கொடுத்துவிட்டோம். தேமுதிக வந்தால் டெல்லி புறப்பட்டு விடும். எனவே, அதிமுகவுடன் கூட்டணியா, இல்லையா? என்பதை இனி முடிவு செய்யவேண்டியது தேமுதிக தான்.

கூட்டணி தொடர்பாக தேமுதிக பேச்சு நடத்தியதை திமுக வெளியே சொல்லியிருக்க கூடாது. அரசியல் நாகரிகமின்றி திமுக வெளிப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #LSPolls
பாராளுமன்ற தேர்தல் தேதி அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வருகிற 9-ந்தேதி வெளியிடும் என்று தெரிய வந்துள்ளது. #LSPolls #ElectionCommission
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, மார்ச் மாதம் 5-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது.
எனவே இந்த ஆண்டும் மார்ச் 5-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசு சில முக்கிய நலத்திட்டங்களை அறிவிக்க உள்ளதால் தேர்தல் அட்டவணை சற்று தள்ளிப் போகும் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் முதல் வாரம் பாராளுமன்ற தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியானது.
7-ந்தேதி முதல் 10-ந் தேதிக்குள் தேர்தல் அட்டவணையை வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்பட்டது. இதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தங்களை தயார்ப்படுத்தி வந்தன.
7-ந்தேதி (இன்று) டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெறுகிறது. மத்திய பா.ஜனதா அரசின் கடைசி கூட்டம் இதுவாகும். எனவே இந்த கூட்டம் முடிந்த மறுநாள் அதாவது 8-ந்தேதி தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தேர்தல் அட்டவணை வெளியாவது மேலும் தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர்கள் இதுகுறித்து கூறுகையில், “பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. இதனால்தான் தேர்தல் அட்டவணை வெளியிடாமல் தாமதம் செய்யப்படுகிறதோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது. மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையமும் மாறி விட்டது” என்றனர்.
காங்கிரஸ் கட்சியும் தேர்தல் ஆணையம் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமதுபடேல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “பிரதமர் மோடி தினமும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபடி உள்ளார். அந்த சுற்றுப் பயணத் திட்டம் முடியட்டும். அதன் பிறகு தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் காத்து இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பிரதமர் அலுவலகம் சொல்லியபடி நாங்கள் செயல்படுவதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. பிரதமரின் சுற்றுப்பயண திட்டத்துக்கு ஏற்ப நாங்கள் செயல்படவில்லை. தேர்தல் அட்டவணையை நாங்கள் தயார் செய்து விட்டோம். உரிய நேரத்தில் அது வெளியிடப்படும்.
தேர்தல் அட்டவணையை கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது மார்ச் 5-ந்தேதி வெளியிடப்பட்டது. மே 31-ந்தேதிக்குள் தேர்தல் நடவடிக்கைகளை முடித்து கொள்ள வேண்டியதிருந்ததால் மார்ச் 5-ந்தேதி அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது தேர்தல் தேதியை அறிவிக்க கூடுதல் கால அவகாசம் உள்ளது.
இந்த தடவை தேர்தல் முடிவுகளை அறிவிக்க ஜூன் 3-ந்தேதி வரை அவகாசம் இருக்கிறது. எனவே தேர்தல் அட்டவணை வெளியிட எங்களுக்கு அவகாசம் உள்ளது. எந்த தாமதமும் இல்லை.
இவ்வாறு அந்த அதிகாரி கூறி இருந்தார்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அட்டவணை 9-ந்தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. 8-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிப்பு மேலும் ஒருநாள் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.
இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடக்கும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சில திட்ட அறிவிப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும்.
அந்த ஒப்புதலை அரசிதழில் முறைப்படி வெளியிட ஒருநாள் அவகாசம் தேவை. அதன்படி இன்று மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நாளை (8-ந்தேதி) அரசிதழில் வெளியிடப்படும். அதன் பிறகு அதற்கு அடுத்த நாளே (9-ந்தேதி) தேர்தல் தேதி அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்த தடவை 10 கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலுடன் சில மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. காஷ்மீரிலும் சட்டசபை தேர்தலை, பாராளுமன்ற தேர்தலுடன் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 21 சட்டசபை தொகுதிகள் காலி இடமாக உள்ளன. அந்த 21 தொகுதிகளின் இடைத்தேர்தலும் பாராளுமன்ற தேர்தலுடன் நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடக்கத்தில் நடைபெற உள்ளது.
கோடையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் முதலில் தேர்தல் நடத்த தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அது ஏற்கப்படுமா? என்று தெரியவில்லை.
ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன், 21 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலும் ஒரே நாளில் நடத்தப்படும் போது தமிழ்நாட்டில் தேர்தல் விறுவிறுப்பு முன்பை விட அதிகமாக இருக்கும். #LSPolls #ElectionCommission

பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்திய செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. #LSPolls #DMDK #ADMK #DMK
சென்னை:
சூரியன் படத்தில் அரசியல்வாதியாக வரும் கவுண்டமணி, “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்பார். இணைப்பு துண்டிக்கப்பட்ட தொலைபேசியில் நீண்ட நேரமாக பேசுவது போல் பாவ்லா காட்டும் அவர், அது தெரிய வந்து அசிங்கப்பட்டதும் பேசும் வசனமே இது.
தமிழக அரசியல் களத்தில் இப்போது அரங்கேறும் காட்சிகளை பார்க்கும் போது கவுண்டமணி பேசிய அந்த வசனமே நினைவுக்கு வருகிறது.
சினிமாவில் கொடிகட்டி பறந்த விஜயகாந்த் 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கினார்.
அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழக அரசியலில் கால்பதிக்கும் எண்ணத்தில் 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட வைத்தார்.
அவரது எண்ணப்படியே தே.மு.தி.க. 8-ல் இருந்து 10 சதவீத வாக்குகளை அள்ளியது. பா.ம.க. செல்வாக்குடன் விளங்கிய விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்துக்குள் புகுந்தார்.
இதன் பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைக்காமல் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. அப்போது மேடைகளில் முழங்கிய விஜயகாந்த், “மக்களோடும், தெய்வத்தோடும் மட்டுமே நான் கூட்டணி அமைப்பேன்” என்று முழங்கினார்.
1996-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற கணிசமான வாக்குகளே தி.மு.க.வை காலி செய்தது. இதனால் 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஜயகாந்தோடு ஜெயலலிதா கூட்டணி அமைத்தார். இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதும் ஜெயலலிதா முதல்-அமைச்சராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் அமர்ந்தனர்.
ஆனால் இந்த கூட்டணி நீடிக்கவில்லை. தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே அ.தி.மு.க.வுடனான நட்பை விஜயகாந்த் முறித்துக் கொண்டார். அவரது நடவடிக்கைகளை விமர்சித்து சட்டசபையிலேயே ஜெயலலிதா காட்டமாக பேசினார்.
அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைக்காவிட்டால் தே.மு.தி.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்காது. இப்போது அந்த கட்சி தலைவரின் செயல்பாடுகளை பார்க்கும் போது, உண்மையிலேயே தே.மு.தி.க.வோடு கூட்டணி அமைத்ததற்காக தான் மிகவும் வேதனைபடுகிறேன் என்று குறிப்பிட்டார். இதன் பிறகு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர்.
இதன் பின்னணியில் அ.தி.மு.க. இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் இனி... அ.தி.மு.க.வோடு தே.மு.தி.க. கூட்டணி அமைக்காது என்றே எதிர்பார்க்கப்பட்டது.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் உறுதியுடன் இருந்தார். இதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமானது. தி.மு.க. அணியில் விஜயகாந்த் சேர்ந்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இதனை மனதில் வைத்தே கருணாநிதி அளித்த பேட்டியில், “பழம் நழுவி பாலில் விழும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் சேரவில்லை.
முதல்-அமைச்சர் கனவுடன் மக்கள் நலக்கூட்டணியில் போய் விஜயகாந்த் சேர்ந்தார். இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் விஜயகாந்தை மேடையில் ஏற்றி கிரீடம் சூட்டி அழகு பார்த்தன. “அடுத்த முதல்வர் விஜயகாந்த்” என்கிற முழக்கத்தை கூட்டணி கட்சிகள் முன் வைத்தன. ஆனால் அது எல்லாம் வெற்றுக் கோஷமாகிப் போனது. மக்கள் நலக் கூட்டணி வீழ்ச்சியை சந்தித்தது.
இப்படி தமிழக அரசியல் களத்தில் கடந்த காலங்களில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சி தலைவர்களின் நம்பிக்கையை பெறாதவராகவே விஜயகாந்த் இருந்துள்ளார்.
இதற்கு வட்டியும், முதலுமாக சேர்த்து இப்போது அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தே.மு.தி.க.வை பழிவாங்கி விட்டதோ என்கிற எண்ணமே இப்போது நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது தோன்றுகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அப்போது வீசிய மோடி அலையிலும் ஜெயலலிதாவே 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார். 2 தொகுதிகளில் மட்டுமே (பொன்.ராதாகிருஷ்ணன், அன்புமணி) பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது.
இதன்பிறகு பா.ஜனதா கட்சியுடன் நெருக்கம் காட்டாமல் தே.மு.தி.க. விலகியே இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் சென்னை திரும்பியதும் அவரை மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனை தொடர்ந்து பா.ஜனதா மேலிட தலைவரான பியூஸ் கோயல் விஜயகாந்தை நேரில் சந்தித்து கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது முடிவுக்கு வரவில்லை. பா.ம.க.வுடன் முன்கூட்டியே கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து அக்கட்சிக்கு 7 தொகுதிகளையும், ஒரு மேல்சபை உறுப்பினர் பதவியையும் வழங்கியதை விஜயகாந்த் விரும்பவில்லை.
இருப்பினும் பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகளை வழங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துவருகிறார். இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாகவே அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் சேருவாரா என்கிற குழப்பம் நீடித்து வந்தது.
இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க.-பா.ஜனதா தலைவர்களுடன் மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் சந்தித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதே நேரத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனை அவரது வீட்டில் தே.மு.தி.க. நிர்வாகிகள் சிலரும் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரகசியமாக நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை வெளியில் கசிந்து வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இதனால் ஒரே நேரத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பேச்சு நடத்திய ஒரே கட்சி என்கிற அவப்பெயர் தே.மு.தி.க.வுக்கு நேற்று ஏற்பட்டது.
இதுபற்றி சுதீசிடம் கேள்வி எழுப்பியபோது, திணறலாகவே பதில் அளித்தார். பா.ம.க., அ.தி.மு.க. அணியில் சேர்ந்ததும் தி.மு.க.வுடன் பேச்சு நடத்தியது உண்மைதான் என்று அவர் கூறினார்.

துரைமுருகன் கூறும்போது, “தே.மு.தி.க. கூட்டணிக்காக எங்களை தேடி வந்தது. இப்போது எங்கள் தலைவர் ஊரிலும் இல்லை. அவர்களுக்கு கொடுப்பதற்கு எங்களிடம் சீட்டும் இல்லை” என்று அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக தெரிவித்தார். அவரது இந்த பேட்டி வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த்துடன் தி.மு.க., கூட்டணிக்கு முயற்சித்தது போல இப்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் தே.மு.தி.க. ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைக்கு வராமல் எல்லாம் முடிந்த பின்னர் கூட்டணிக்கு வருவதாக தி.மு.க.வை தேடிச்சென்று கூறி அவமானப்பட்டுள்ளது. தி.மு.க.வும் அதனை பயன்படுத்தி தே.மு.தி.க.வை அலற வைத்துள்ளது.
அதே நேரத்தில் எப்படியாவது தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருந்தது. பாஜக அறிவுறுத்தலின்பேரில், அதிமுக தலைவர்கள் விஜயகாந்த்தை பலமுறை சந்தித்து பேசி உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் மட்டும் 10-க்கும் மேற்பட்ட முறை ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கூட்டணிக்காக அ.தி.மு.க.வை விஜயகாந்த் அலைய விட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒரே நேரத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய தே.மு.தி.க.வின் செயல் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி உள்ளது.
இது தொடர்பான கேலியும், கிண்டல்களும் அதிகமாக பரவி வருகிறது. தே.மு.தி.க.வின் இந்த இரட்டை நிலைப்பாட்டால் கட்சியின் செல்வாக்கு மேலும் சரிய வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்களும் கணித்துள்ளனர்.
தே.மு.தி.க.வின் கூட்டணி தாமதத்துக்கு தொகுதி எண்ணிக்கை மட்டுமே பிரச்சனையா? இல்லை வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா? என்பது பற்றிய விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. எல்லாம் தே.மு.தி.க.வுக்கே வெளிச்சம். #LSPolls #DMDK #ADMK #DMK

தி.மு.க.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை பற்றி துரைமுருகன் அளித்த பேட்டி நேற்று பரபரப்பாகவும், அதே நேரத்தில் கலகலப்பாகவும் அரசியல் களத்தில் பேசப்பட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த்துடன் தி.மு.க., கூட்டணிக்கு முயற்சித்தது போல இப்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் தே.மு.தி.க. ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைக்கு வராமல் எல்லாம் முடிந்த பின்னர் கூட்டணிக்கு வருவதாக தி.மு.க.வை தேடிச்சென்று கூறி அவமானப்பட்டுள்ளது. தி.மு.க.வும் அதனை பயன்படுத்தி தே.மு.தி.க.வை அலற வைத்துள்ளது.
அதே நேரத்தில் எப்படியாவது தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருந்தது. பாஜக அறிவுறுத்தலின்பேரில், அதிமுக தலைவர்கள் விஜயகாந்த்தை பலமுறை சந்தித்து பேசி உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் மட்டும் 10-க்கும் மேற்பட்ட முறை ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கூட்டணிக்காக அ.தி.மு.க.வை விஜயகாந்த் அலைய விட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒரே நேரத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய தே.மு.தி.க.வின் செயல் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி உள்ளது.
இது தொடர்பான கேலியும், கிண்டல்களும் அதிகமாக பரவி வருகிறது. தே.மு.தி.க.வின் இந்த இரட்டை நிலைப்பாட்டால் கட்சியின் செல்வாக்கு மேலும் சரிய வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்களும் கணித்துள்ளனர்.
தே.மு.தி.க.வின் கூட்டணி தாமதத்துக்கு தொகுதி எண்ணிக்கை மட்டுமே பிரச்சனையா? இல்லை வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா? என்பது பற்றிய விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. எல்லாம் தே.மு.தி.க.வுக்கே வெளிச்சம். #LSPolls #DMDK #ADMK #DMK
பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக அணியில் தேமுதிக இடம்பெறுவது குறித்த கூட்டணி ஒப்பந்தம் நாளை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #DMDK #ADMK
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.-தி.மு.க. தலைமையில் 2 அணிகள் உருவாகி கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்தது. அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க. தலைமையில் உருவான அணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தே.மு.தி.க.வை இழுக்க அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் முயற்சி செய்தன. கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக இரு கட்சிகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தினர்.
பா.ம.க.வுக்கு இணையாக 7 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் விஜயகாந்த் பிடிவாதமாக இருந்தார். இதனால் தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பது புரியாத புதிராக இருந்து வந்தது.
இதற்கிடையில் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு தொகுதி உடன்பாட்டை நிறைவு செய்தது. இதனால் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறாது என்ற நிலை ஏற்பட்டது.
தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு முடிவடைய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அ.தி.மு.க.வால் கூட்டணியை இறுதி செய்ய முடியாததால் இழுபறி நீடித்தது. கூட்டணியை உறுதி செய்து பிரதமர் பொதுக் கூட்டத்தில் விஜயகாந்தை நிறுத்த அ.தி.மு.க. முயற்சி செய்தது.
ஆனால் அது பலன் அளிக்கவில்லை. முதலில் 3 தொகுதி தருவதாகவும் பின்னர் 4 தொகுதி ஒதுக்குவதாகவும் அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 5 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் வலியுறுத்தியதால் நேற்று கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனது.
இதற்கிடையே அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் நேற்று தி.மு.க.வுடனும் கூட்டணி பற்றி பேச நிர்வாகிகளை தே.மு.தி.க. தலைமை அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் இரு கட்சி நிர்வாகிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. தரப்பில் 4 தொகுதிகள் கொடுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இதுதவிர மேல்சபை உறுப்பினர் பதவியும் கொடுப்பதாக கூறியதாக தெரிகிறது. இதனை தேமுதிக ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டதும் கூட்டணி உடன்பாடு நாளை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. 4 தொகுதியும், ஒரு மேல்சபையும் கொடுப்பதாக கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நாளை நல்ல நாளாக இருப்பதால் உடன்பாடு கையெழுத்தாகும்’ என்றார். #LSPolls #DMDK #ADMK

பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில் தே.மு.தி.க. கலந்து கொள்ளவில்லை. இதனால் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே இனி கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவித்தார்.