என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதிமுக சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் மல்லை சத்யா போட்டி
    X

    மதிமுக சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் மல்லை சத்யா போட்டி

    காஞ்சிபுரம் தொகுதியில் ம.தி.மு.க. கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. #LSPolls #MDMK #MallaiSathya
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு அல்லது காஞ்சிபுரம் தனி தொகுதியை ம.தி.மு.க. கேட்டு வருகிறது. ஈரோடு தொகுதியில் போட்டியிட கணேசமூர்த்தி விரும்புவதாக கூறப்படுகிறது.



    ஆனால் அந்த தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட விரும்புகிறார். அந்த தொகுதியை கேட்டு காங்கிரஸ் வற்புறுத்துவதால் தி.மு.க. தரப்பிலும் வேறு தொகுதியை தேர்வு செய்யும் படி ம.தி.மு.க.விடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதையடுத்து காஞ்சிபுரம் தொகுதியை ம.தி.மு.க. கேட்டுள்ளது. இந்த தொகுதியில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.   #LSPolls #MDMK #MallaiSathya
    Next Story
    ×