என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    மானாமதுரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இலக்கியதாசன் இதுவரை செல்போன் பயன்படுத்தியதில்லை. #DMK #IlakiyaDasan
    மானாமதுரை:

    பாராளுமன்ற தேர்தலுடன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக இலக்கியதாசன் போட்டியிடுகிறார். எம்.ஏ., பி.எச்.டி. முடித்துள்ள இவர் இதுவரை செல்போன் பயன்படுத்தியதில்லை. குடும்பத்தில் உள்ளவர்கள் மூலமாகத்தான் அவரை தொடர்புகொள்ள முடியும். வெளியில் எங்காவது சென்றால் மனைவியிடம் கூறிவிட்டு செல்வார்.

    தேர்தலில் போட்டியிடுவதால் தற்போது செல்போன் வாங்கியுள்ளார். எளிமையான தோற்றம், இயல்பான பேச்சு, பழக்க வழக்கம் கொண்ட இவர் தற்போது தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். #DMK #IlakiyaDasan
    தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு 4 நாட்கள் அளிக்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்ளத் தவறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கூறினார். #LSPolls
    சென்னை:

    சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் (இடைத்தேர்தல்) நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 20,271 பேர்கள் தேர்தல் பணி அலுவலர்களாக தெரிவுசெய்து அவர்களுக்கு தேர்தல் பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அவர்களது பணி நியமனம் குறித்து குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது.

    இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் 24.3.2019 (ஞாயிற்றுக்கிழமை), 7.4.2019 (ஞாயிற்றுக்கிழமை), 14.04.2019 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 17.4.2019 (புதன்கிழமை) அன்றும் நடைபெற உள்ளது. தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிற்சி நடைபெறும் வகுப்புகளுக்கு மேற்கூறிய நாட்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் அனைவருக்கும் அவர்களது விவரங்கள் அடங்கிய தகவல் குறிப்பு படிவம் வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து விடுபட்ட விவரங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். இந்தப் படிவங்கள் 24.3.2019 அன்று பயிற்சி மையங்களிலேயே வழங்கப்படும்.

    புகைப்படம் ஒட்டத்தவறிய அலுவலர்களுக்கு உதவிடும் வகையில் அந்தந்தப் பயிற்சி மையங்களில் வெப்கேமரா மூலம் புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பயிற்சி கையேடுகள் இவ்வகுப்புகளில் வழங்கப்படும். அலுவலர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் நகலினை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

    இந்தப் பயிற்சி வகுப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் அலுவலர்களுக்கு உதவிடும் வகையில் 16 மருத்துவக் குழுக்கள் அந்தந்தப் பயிற்சி மையங்களில் பணியாற்றவுள்ளனர்.

    பயிற்சியில் கலந்து கொள்ளத் தவறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தால் மட்டுமே இறுதி ஆணை பிறப்பிக்க இயலும். இதுதொடர்பாக அவர்களது பணிப்பதிவேடுகளிலும் பதிவு மேற்கொள்ளப்படும். எனவே, அனைவரும் மேற்கண்ட பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LSPolls

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #thirunavukkarasar
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வலுவான, பலமான கூட்டணி அமைந்துள்ளது. ஒத்த கருத்துடைய தலைவர்கள் இடம் பெற்றுள்ள கூட்டணி 39 தொகுதிகளிலும், இக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்கள் பிரச்சனைக்காக போராடுகிற இந்த கூட்டணியில் நான் திருச்சியில் போட்டியிட தலைவர் ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மோடி எதுவும் செய்யவில்லை. மக்களுக்கு அவர் மீது வெறுப்பு தான் அதிகம் உள்ளது. ராகுல் தலைமையில் ஆட்சி அமையும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.



    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் விரைவில் வர இருக்கிறார். பிரியங்கா வருவது பற்றி ராகுல்தான் முடிவு செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi #thirunavukkarasar
    வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். #makkalneedhimaiamparty #PuducherryCandidate
    புதுச்சேரி:

    நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல், கடந்த 20ம் தேதி வெளியிட்டார். இதில் புதுச்சேரி தொகுதியில் டாக்டர். எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், புதுச்சேரி தொகுதி வேட்பாளர் டாக்டர். எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    புதுச்சேரியில் தனி மாநில அந்தஸ்து, கடன்களை தள்ளுபடி செய்தல் மற்றும் மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரியை இணைத்தல் ஆகியவை தான் முக்கிய பிரச்சனையாக உள்ளன. ஒவ்வொரு தேர்தலின் போதும் அனைத்து கட்சியினரும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என கூறி வருகின்றனர். ஆனால், பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுவது கூட இல்லை. எனக்கு ஒரு வாய்ப்பளித்தால், நிச்சயம் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.



    மேலும் எனது தேர்தல் பிரச்சாரத்தினை மார்ச் 27 அன்று கலாபேட்டிலிருந்து துவங்க உள்ளேன். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் ஏஎப்டி மைதானத்தில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்வார்.

    இவ்வாறு அவர் பேசினார். #makkalneedhimaiamparty #PuducherryCandidate
    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இதில் பணக்கார வேட்பாளர் யார் எனும் விவரம் வெளியாகியுள்ளது. #Andrapradesh #Richestcandidate #KondaVishweshwarReddy
    ஐதராபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை முழுவதுமாக அறிவித்த நிலையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகின்றன. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளுக்கு சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்கின்றனர்.

    இந்த வரிசையில் தெலுங்கானாவின் சிவெல்லா பகுதியில் போட்டியிடும் கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி,  சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  வேட்பு மனுவுடன் சொத்து விவரம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பித்திருந்தார். அதில், அவரது சொத்து மதிப்பு ரூ. 895 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.223 கோடி அசையும் சொத்துக்கள். அப்போலோ மருத்துவமனையின் பங்குதாரரான மனைவி சங்கீதா ரெட்டி பெயரில் ரூ.613 கோடி உள்ளது. மகன்கள் பெயரில் ரூ.20 கோடி உள்ளது என தெரிய வந்துள்ளது.



    மேலும் ரெட்டி மற்றும் அவரது மனைவி பெயரில் ரூ.36 கோடியில் அசையா சொத்துக்கள் உள்ளன. இதேபோல் மனைவியின் பெயரில் ரூ.1.81 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன.

    இருப்பினும் இவர்களிடத்தில் சொந்த கார் , பைக் என எந்த வாகனமும் இல்லை என்பது சுவாரஸ்யமான தகவல் ஆகும்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் விஷ்வேஷ்வர் ரெட்டிதான் பணக்கார வேட்பாளர் ஆவார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை விடவும், கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டியின் சொத்து மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. #Andrapradesh #Richestcandidate #KondaVishweshwarReddy

    திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். #TNByPoll #SathyaPrathaSahoo
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய தேர்தல் கமி‌ஷன் தேர்தல் தேதியை முடிவு செய்து அறிவித்தால் தேர்தலை நடத்துவோம்.

    அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் வழக்கு இன்னும் முடிவுக்கு வராததால் அதில் தற்போது தேர்தல் நடத்த இயலாது. திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு கிடைத்து விட்டது. அதை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி உள்ளோம்.

    தேர்தல் வேட்புமனு பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் உள்ளனர். அவர்களது பேச்சில் ஏதாவது விதிமீறல் இருந்தால் விளக்கம் கேட்கப்படும்.



    தேர்தல் விதிமீறல் குறித்து அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பில் இருந்தும் புகார்கள் வருகின்றன. அந்த புகார்கள் மீது உடனடியாக விசாரிக்கப்படுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் ரூ.1500 பணம் கிடைக்கும் என்று பேசியதாக தி.மு.க. கொடுத்த புகார் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். அவரது அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தமிழகத்தில் இதுவரை ரூ. 30 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.4.45 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. 209 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 94 கிலோ தங்கம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNByPoll #SathyaPrathaSahoo
    31 கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா? என சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினார். #LSPolls #ChandrababuNaidu #JaganMohanReddy
    அமராவதி:

    ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று கட்சி தலைவர்களிடையே டெலிகான்பரன்ஸ் மூலம் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தாக்கல் செய்த வேட்பு மனுவுடன்  தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், அவர் மீது 31 குற்றவழக்குகள் உள்ளதாக கூறியுள்ளார். நாட்டில் எந்த ஒரு தலைவருக்கும் இந்த அளவுக்கு குற்ற வழக்குகள் இருந்திருக்காது. இப்படி 31 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு தலைவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா?



    ஜெகன் மோகன் ரெட்டி மூலம் ஆந்திராவில் அதிகாரம் செலுத்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் முயற்சி செய்கிறார். ஆந்திராவில் உள்ள வளங்களைப் பார்த்து ஜெகன் மூலம் அதிகாரங்களை கைப்பற்ற முயற்சி மேற்கொள்கிறார்.  ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தை சந்திரசேகர் ராவிடம் கொடுத்துவிடுவார் என மக்கள் பயப்படுகிறார்கள்.

    தெலுங்கானா முதலமைச்சர் தனது தவறான செயல்பாடுகளால் ஐதராபாத்தின் பெருமையை அழித்துவிட்டார். எனவே, ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரசேகர்  ராவுக்கும் பொதுத் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #LSPolls #ChandrababuNaidu #JaganMohanReddy
    தர்மபுரியில் 4 ரோடு சந்திப்பு வழியாக உழவர் சந்தைக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள், நடைபாதை வியாபாரிகளிடம் ஓட்டு கேட்டார். #LSPolls #MKStalin
    தர்மபுரி:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பிறகு தர்மபுரி நகருக்கு வந்து ஓட்டலில் தங்கி இருந்தார்.

    இன்று காலை அவர் டி-சர்ட் மற்றும் பேன்ட் அணிந்து நடை பயிற்சி மேற்கொண்டார். ஓட்டலில் இருந்து புறப்பட்ட அவர், 4 ரோடு சந்திப்பு வழியாக உழவர் சந்தைக்கு சென்றார். அங்கு விவசாயிகளிடம் ஓட்டு கேட்டார்.

    அப்போது விவசாயிகள் சிலர் தர்மபுரி மாவட்டத்தில் மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் வந்தபோது அந்த நீர் தேவையில்லாமல் கடலில் கலந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து நீரை பம்பிங் செய்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பி விவசாயிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை அவர் பொறுமையுடன் கேட்டார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நீங்கள் செயல்படுத்தினாலும், அந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வரவில்லை என்றும் சிலர் கூறினர். அதையும் அவர் கேட்டுக்கொண்டார்.



    அதன் பிறகு அங்குள்ள ஆவின் பாலகத்துக்கு வந்தார். அங்கு தொண்டர்களுடன் சேர்ந்து டீ சாப்பிட்டார். பின்னர் 4 ரோடு சந்திப்பு பகுதிக்கு வந்தார். அங்கு நடைபாதை வியாபாரிகளிடம் ஓட்டு கேட்டார். அதன் பிறகு நடந்து ஓட்டலுக்கு சென்றார். வழிநெடுக பெண்களும், மாணவர்களும், இளைஞர்களும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அவரும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் போஸ் கொடுத்தார்.

    இன்று பிற்பகலில் அவர் அரூர் கச்சேரி மேட்டில் தி.மு.க. பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக நேற்றும், இன்றும் அவர் விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோரிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்துசெய்யப்பட்டது. #LSPolls #MKStalin

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழிக்கும், தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள் பற்றி பார்க்கலாம். #LSPolls #Kanimozhi #TamilisaiSoundararajan
    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இங்கு தி.மு.க. கூட்டணி வேட்பாளராக தி.மு.க.வின் மாநில மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி.யும், அ.தி.மு.க. கூட்டணி சார்பாக பா.ஜ.க. மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுவது தான் இதற்குக் காரணம்.

    எதிரெதிர் துருவங்களான இந்த இரு வேட்பாளர்களும் இங்கு களத்தில் இறங்கினாலும் இவர்கள் இருவருக்குமிடையே சில ஒற்றுமைகளும் உள்ளன. பெண் வேட்பாளர்களான இருவரின் பெயர்களும் தமிழின் சிறப்பை உணர்த்தும் பெயர்களாகும். அத்துடன் இவ்விருவரும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள். இருவருமே பிரபல அரசியல்வாதிகளின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.



    கனிமொழியின் தந்தையான தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி, முத்தமிழறிஞர் என்று போற்றப்பட்டவர். தமிழிசையின் தந்தையான தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், இலக்கியச் செல்வர் என்று போற்றப்படுபவர்.

    தென் தமிழகத்தின் கடைக்கோடியான தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி, தமிழிசை ஆகிய இருவரும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வசித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #LSPolls #Kanimozhi #TamilisaiSoundararajan
    துணை முதல்வரை கண்டு பயப்பட போவதில்லை என்றும் அவருடைய மகனை அவர்களின் இடத்திலேயே தோற்கடிப்பேன் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். #LSPolls #Congress #EVKSElangovan
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் தேனி தொகுதி வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது:-

    கேள்வி:- ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் உங்களை எதிர்த்து போட்டியிடுகிறார்களே?

    பதில்:- என்னை எதிர்த்து போட்டியிடுபவர்களை நான் போட்டியாகவே கருதவில்லை. என்னை பொறுத்தவரையில் நான் சுடுகாட்டில் தியானம் செய்து அரசியல் செய்பவன் அல்ல. அல்லது கிளிஜோசியம் பார்த்து அரசியல் செய்பவன் அல்ல.

    மக்களின் குறைகளை அறிந்து அதை தீர்ப்பதற்காக பாடுபடுகின்ற ஒரு அரசியல்வாதியாக இருக்கின்றேன். 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரனாக இருக்கின்றேன்.

    தேனியில் நான் போட்டியிட வேண்டும் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டு இருக்கிறார். கண்டிப்பாக போட்டியிடுவதோடு மட்டுமல்ல. மிகப்பெரிய வெற்றியை நான் பெறுவேன். காரணம் மக்கள் இன்றைக்கு மதவாத சக்திகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிற காரணத்தால் மிகப்பெரிய வெற்றியை நான் பெறுவேன்.

    கேள்வி:- தேனியில் வரும் 6 தொகுதிகளில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், இடைத்தேர்தல் வருகிறது. அது ஏற்கனவே அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதி. ஓ.பி.எஸ். தொகுதியாக போடி நாயக்கனூர் உள்ளது. நீங்கள் எப்படி சவாலை எதிர்கொள்வீர்கள்?



    என்னைப் பொறுத்தவரையில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவையே சந்தித்தவன் நான். எனவே துணை முதல்வரை கண்டு நான் பயப்பட போவதில்லை. அவர்களை அவர்களுடைய இடத்திலேயே தோற்கடிப்பேன்.

    கேள்வி:- பிரசாரத்தை எப்போது தொடங்குவீர்கள்?

    பதில்:- கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து விட்டு என்னுடைய பிரசாரத்தை தொடங்குவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Congress #EVKSElangovan
    தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27-ந்தேதி திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தொடங்கி ஏப். 16-ம் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். #DMDK #PremalathaVijayakanth #LSPolls
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்.

    உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கூட்டணி கட்சி தலைவர்களுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. அப்போது உடல் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது.


    இதனால் அவரது மனைவி பிரேமலதா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க., பா.ம.க. , பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அவர் வருகிற 27-ந்தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    இதுகுறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடைபெறவுள்ள 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க. தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தலைவர் கேப்டன் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27.03.2019 (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #PremalathaVijayakanth #LSPolls
    பீகார் மாநிலம் பாட்னா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் போட்டியிடுகிறார். #NDACandidates #Bihar #RaviShankarPrasad
    பாட்னா:

    பாராளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாநில பாஜக பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.



    பாட்னா தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பாஜக சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்ற சத்ருகன் சின்காவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    நவடா எம்பி கிரிராஜ் இந்த முறை பெகுசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். பாடலிபுத்திரத்தில் ராம்கிரிபால் யாதவ், அர்ராஹ் தொகுதியில் ஆர்.கே.சிங், புக்சார் தொகுதியில் அஸ்வனி சவுபே, கிழக்கு சம்பரன் தொகுதியில் ராதா மோகன் சிங், சரன் தொகுதியில் ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிடுகின்றனர்.

    லோக் ஜனசக்தி கட்சியின் சந்தன் குமார் நவடா தொகுதியிலும், சிரக் பஸ்வான் ஜமுய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். #NDACandidates #Bihar #RaviShankarPrasad
    ×