என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் 27-ந்தேதி பிரசாரம் செய்கிறார். #LSPolls #MDMK #Vaiko
    சென்னை:

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்து வருகிறார்.

    நாளை மற்றும் நாளை மறுநாள் அவர் பிரசாரம் செய்யவில்லை. மீண்டும் 26-ந்தேதி தொடங்கி 28-ந் தேதி வரை அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்

    அவரது பிரசார விவரத்தை ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இன்று மாலை 3.30 அளவில் கோவில்பட்டி தேவர் சிலை அருகில் வைகோ பேசுகிறார்.

    4.00 சாத்தூர்

    4.30 படந்தால்

    4.45 சுப்ரமணியபுரம் விலக்கு

    5.00 தாயில்பட்டி

    5.15 மண்குண்டாம்பட்டி

    5.45 வெம்பக்கோட்டை

    6.00 முத்துசாமிபுரம்

    6.15 ஆலங்குளம் முக்கு ரோடு

    6.30 டி.கரிசல்குளம்

    6.45 தொம்பக்குளம்

    7.00 கீழராஜகுலராமன்

    7.15 திருவேங்கடபுரம்

    7.45 வ.உ.சி. நகர்

    8.30 ராஜபாளையம் பொதுக்கூட்டம்.

    26.03.2019 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆம்பூர், பேரணாம்பட்டு , குடியாத்தம், வேலூர், மேல் விஷாரம், ஆற்காடு , ராணிப்பேட்டை முத்துக்கடை, வாலஜா, சோளிங்கர் பாணாவரம், மணப்பாக்கம், நெமிலி.

    27 மார்ச் 2019 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வட சென்னை பழனியாண்டவர் கோவில் தெரு, பெரம்பூர்.

    மத்திய சென்னை டாணா தெரு, புரசைவாக்கம், தென் சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில், மேற்கு சைதாப்பேட்டை சாரதி நகர் பேருந்து நிலையம் அருகில் (ஜோன்ஸ் ரோடு).

    மார்ச் 28 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #MDMK #Vaiko
    மதுரையில் அனுமதியின்றி தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #LSPolls #Venkatesan
    மதுரை:

    மதுரையில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்பு மனுவை நேற்று தேர்தல் அதிகாரி நடராஜனிடம் தாக்கல் செய்தார்.

    வேட்பு மனுத்தாக்கலில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் அதிகமாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக வெங்கடேசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் தங்கமீனா தல்லாகுளம் போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் வேட்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #LSPolls #Venkatesan

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுகிறார். #LSPolls #congress #congressCandidates
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    தமிழ்நாடு-புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 20 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ்-10, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், ம.தி.மு.க., முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவைக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த வாரம் தொகுதி பங்கீடு நடந்து முடிந்ததும் மறுநாளே தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்தது. விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இடது சாரிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கின.

    காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய டெல்லி மேலிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். ஒவ்வொரு தொகுதியையும் 3 முதல் 5 பேர் பிடிவாதமாக கேட்டதால் காங்கிரஸ் வேட்பாளர்களை முடிவு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டம் ராகுல் தலைமையில் நடந்தது. அதில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் யார்-யாரை வேட்பாளர்களாக அறிவிப்பது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இரவு வரை இந்த ஆலோசனை நீடித்தது.

    தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எப்படியாவது தொகுதியை பெற்று விட வேண்டும் என்று தீவிரமாக இருந்ததால் கடும் சவால்களுக்கு மத்தியில்தான் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிந்தது.

    இதையடுத்து நேற்று இரவு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி- எச்.வசந்த குமார்

    விருதுநகர்- மாணிக் தாகூர்

    திருச்சி - திருநாவுக்கரசர்

    ஆரணி-விஷ்ணு பிரசாத்

    திருவள்ளூர் (தனி)- ஜெயக்குமார்

    தேனி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    கரூர்- ஜோதிமணி

    கிருஷ்ணகிரி- டாக்டர் செல்லக்குமார்

    புதுச்சேரி- வைத்திலிங்கம்


    சிவகங்கை தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அங்கு யாரை நிறுத்துவது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அந்த தொகுதி கேட்கப்பட்டது.

    ஆனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு அந்த தொகுதியை ஒதுக்க மறுத்து விட்டனர். இதையடுத்து அங்கு களம் இறங்க காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இன்று இரவுக்குள் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விவரம் தெரிய வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் செயல் தலைவர்கள் மற்றும் வாரிசுகளுக்கு இடம் வழங்கப்பட மாட்டாது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அதை வேட்பாளர் தேர்வின்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களால் உறுதியாக கடைபிடிக்க இயலவில்லை.

    செயல் தலைவர்களில் வசந்தகுமார், விஷ்ணுபிரசாத் இருவரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை போராடி பெற்றுள்ளனர். அதுபோல திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் ஆகியோரும் தங்கள் தொகுதியை கடைசி வரை போராடியே இறுதி செய்ய முடிந்ததாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பால் சில தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளன.

    கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனை எதிர்த்து எச்.வசந்தகுமார் போட்டியிடுவதால் அந்த தொகுதி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல தேனி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இறங்கி இருப்பதும் விறுவிறுப்பை உருவாக்கி இருக்கிறது.

    தேனி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் தேனி தொகுதியில் கணிசமான அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது.

    இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அந்த தொகுதியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இறக்கி விட்டுள்ளது. இது அந்த தொகுதியை பரபரப்பான தொகுதியாக மாற்றி இருக்கிறது. அ.தி.மு.க. வாக்குகளையும், ஜாதி வாக்குகளையும் ரவீந்திரநாத்தும், தங்க தமிழ்ச்செல்வனும் பிரிக்கும் நிலையில் இளங்கோவன் களம் இறங்கி இருப்பதால் வாக்குகள் எப்படி மாறும் என்பதில் அதிர்ச்சி கலந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் பிரியாது என்பதாலும் இளங்கோவன் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதாலும் அவருக்கு எதிராக நிற்கும் ஓ.பி.எஸ். மகன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் கடும் சவாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேநிலைதான் திருநாவுக்கரசர் போட்டியிடும் திருச்சி தொகுதியிலும், டாக்டர் செல்லக்குமார் போட்டியிடும் கிருஷ்ணகிரி தொகுதியிலும், ஜோதிமணி போட்டியிடும் கரூர் தொகுதியிலும் ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. #LSPolls #congress #congressCandidates
    தேசியக் கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகியவை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்துவிட்டதாக பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். #LSPolls #PrakashRaj
    சென்னை:

    நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஒரு ஆண்டாக அரசியல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையின்போது, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். இதனால் பா.ஜனதா தலைவர்கள் பலரும் பிரகாஷ் ராஜுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

    சமூக வலைதளங்கள் மூலமாக பா.ஜனதா அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்த பிரகாஷ் ராஜ் நேரடி அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். கடந்த ஜனவரி 1-ந்தேதி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை டுவிட்டரில் பதிவிட்ட பிரகாஷ் ராஜ், ‘புதிய மாற்றத்துக்கான நேரம் இது. எனக்கான பொறுப்புகள் கூடி உள்ளன. உங்கள் அனைவரின் ஆதரவுடன், வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட உள்ளேன். தொகுதி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும். பாராளுமன்றத்திலும் மக்களுக்கான அரசு வேண்டும்’ என பதிவிட்டார். அதன் பின்னர் வரும் தேர்தலில் பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிடுவதாக அவர் டுவிட்டரிலேயே அறிவித்தார்.



    கடந்த மாதமே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரகாஷ் ராஜ் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஆளும் பா.ஜனதா எம்.பியான பி.சி.மோகனை எதிர்த்து பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.  

    வேட்பு மனுத் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், ‘தேசியக் கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகியவை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்துவிட்டன. நான் மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

    பிரகாஷ்ராஜ் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டு இருந்தார். தற்போது அந்த கட்சியையும் அவர் விமர்சித்து இருப்பதால் காங்கிரஸ் பிரகாஷ்ராஜ் கோரிக்கையை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. #LSPolls #PrakashRaj
    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல், ஸ்ரீபிரியா போட்டியிடும் தொகுதிகள் நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:
     
    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் காண்கிறார்.

    மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கும் வேட்பாளர்களின் நேர்காணல்  கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் தேர்தல் பணிக்குழுவோடு சமூக செயற்பாட்டாளர்கள், இலக்கியவாதிகள் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்றது.

    நேர்காணலுக்கு பின்னர் 2 நாட்கள் மனு பரிசீலனை நடைபெற்றது. கமல்ஹாசன் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் முழுக்க தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முன்பே கூறி இருந்தார். அதன்படி வேட்பாளர் தேர்வில் கல்வித்தகுதி, தொகுதி மக்களுக்கு ஆற்றிய பணிகள் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 20-ந்தேதி கமல்ஹாசன் வெளியிட்டார்.

    நாளை மாலை 6 மணிக்கு கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு வேட்பாளர் அறிமுக விழா மற்றும் மாற்றத்துக்கான துவக்கவிழா என்று கமல் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். முதல் பட்டியலில் 21 வேட்பாளர்கள் தான் இடம்பெற்று இருந்தனர். கமீலா நாசர்(மத்திய சென்னை), முன்னாள் காவல் அதிகாரி மவுரியா (வடசென்னை) இருவரை தவிர வேறு பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

    குறிப்பாக, கமல்ஹாசன்  தனது சொந்த ஊரான ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற போகும் அம்சங்கள் குறித்தும் எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் நாளை கோவை பொதுக்கூட்டத்தில்  விடை கிடைக்கும் என்பதால்  தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் திரள்கிறார்கள். பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் இன்று மாலை கோவை வருகிறார்.


    கமல்ஹாசன் போட்டியிட இருப்பது தென் சென்னையிலா அல்லது ராமநாதபுரத்திலா என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். நாளை நடக்கும் இந்த கூட்டத்தில் தான் கமல், ஸ்ரீபிரியா, சினேகன், துணைத்தலைவர் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்கள் தெரியவரும். கமல் ராமநாதபுரத்திலும் ஸ்ரீபிரியா தென் சென்னையிலும் மகேந்திரன் கோவையிலும் களம் இறங்கலாம் என்கிறார்கள்.

    நாளை வேட்பாளர் பட்டியலுடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாக இருக்கிறது. அதனால் தான் மாற்றத்துக்கான துவக்கவிழா என்கிறார்கள். முதல் பட்டியலை வெளியிட்ட போதே கமல்ஹாசன் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் குறை கூறினார்.

    புதிதாக ஒன்றுமே இல்லை. இவை எல்லாமே சிறு வயதில் இருந்தே நான் கேட்ட வாக்குறுதிகள் தான். இவற்றை நிறைவேற்றுவதற்கான வழி முறைகளை மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என்றார். எனவே கமல் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்போகிறார் என்பதை அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி இருக்கின்றன.

    கமல் தனது கட்சிக்காக 100 பேச்சாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களில் நல்ல பேச்சாற்றல் மிக்கவர்கள், பொது மேடைகளில் பேச விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களிடம் நேர்காணல் நடத்தி, 100 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சிறந்த பேச்சாளர்கள் மூலம் இவர்களுக்கு 2 நாள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பொது மேடைகளில் நாகரிகமாக பேசுவது, மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள், திட்டங்களை மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துரைப்பது உள்ளிட்டவை குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு, அவர்கள் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி பா.ஜனதா கட்சி சார்பிலும், அவரது கணவர் டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பிலும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். #LSPolls #BJP #YSRCongress
    நகரி:

    ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி. முன்னாள் மத்திய மந்திரியான இவர் பா.ஜனதா சார்பில் விசாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது கணவரும், முன்னாள் மந்திரியுமான டக்குபதி வெங்கடேஸ்வர ராவ் பர்ச்சூர் சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    கடந்த 2004-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகிய இவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மந்திரியான புரந்தேஸ்வரி, மாநில பிரிவினை காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.



    அரசியலில் இருந்து விலகி இருந்த அவரது கணவர் வெங்கடேஸ்வரராவ் சமீபத்தில் அமெரிக்காவில் வசித்து வரும் தனது மகன் ஹிதேஷ் செஞ்சுராமுடன், ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆந்திர சட்டசபை தேர்தலில், பர்ச்சூர் தொகுதியில் அமெரிக்க குடியுரிமை பெற்ற தனது மகனுக்கு பதிலாக வெங்கடேஸ்வர ராவ் போட்டியிட உள்ளார். கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு கட்சியில் போட்டியிட உள்ளனர். #LSPolls #BJP #YSRCongress
    தமிழகம் முழுவதும் பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரசாரம் செய்ய இருக்கிற நட்சத்திர பேச்சாளர் யார்-யார்? என்பதற்கான பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. #LSPolls #EC
    சென்னை:

    தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்போகும் நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்கள் வருமாறு:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அன்வர் ராஜா, வைத்திலிங்கம், விஜிலா சத்யானந்த், அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வைகைச் செல்வன், தமிழ்மகன் உசேன், நிர்மலா பெரியசாமி, சுந்தரராஜன் ஆகிய 40 பேர் அ.தி.மு.க. கட்சிக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தில் பிரசாரம் மேற்கொள்வார்கள்.

    தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் அப்சல், தமிழ்மதி உள்பட 40 பேர் நட்சத்திர அந்தஸ்தில் பிரசாரம் மேற்கொள்வார்கள்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அந்த கட்சியின் நிர்வாகிகள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத், பிருந்தா கரத், ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 40 பேர்; தே.மு.தி.க.வில் அதன் நிறுவனர் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, எல்.கே.சுதீஷ் உள்பட 40 பேர்; ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திருப்பூர் துரைசாமி, மல்லை சத்யா உள்பட 20 பேர் நட்சத்திர அந்தஸ்தில் பிரசாரம் மேற்கொள்வார்கள்.



    இந்தக் கட்சிகள் தவிர அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், புதிய தமிழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், கொங்கு மக்கள் தேசியக் கட்சி, மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் நட்சத்திர அந்தஸ்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #EC
    மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. #Congress #CandidateList
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை திமுக கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. ஆனால் கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்தது. 

    இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. 

    திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசரும், தேனி தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருவள்ளுர் தொகுதியில் கே.ஜெயகுமார்,  புதுச்சேரி தொகுதியில் வைத்தியலிங்கம், கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக எச்.வசந்தகுமார் , ஆரணியில் டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத்தும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மேலும்  கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் ஜோதிமணி  என்பவரும், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கிருஷ்ணகிரியில் டாக்டர் ஏ.செல்வகுமாரும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது.  இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.



    தேர்தல் முடியும் வரை நகர்ப்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்று டிஜிபிக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #parliamentelection #tndgp #maduraicourt
    சென்னை:

    தேர்தல் நெருங்குவதால் நகர் பகுதிகளில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என நாராயணன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 

    தேர்தல் முடியும் வரை நகர்ப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது.

    மைதானங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம் என தமிழக டிஜிபிக்கு  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #maduraicourt #parliamentelection #tndgp
    தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். #congress #ksalagiri
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை திமுக கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. ஆனால் கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருக்கிறது.

    இந்நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்படும். தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்றார். #congress #ksalagiri
    பாராளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக ரங்கசாமி அக்காள் மகன் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. #rangasamy #nrcongress
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளராக வெங்கடேசன் களம் இறங்கியுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடுகிறது. 

    இதுவரை என்.ஆர்.காங்கிரஸ் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளரை அறிவிக்கவில்லை. பதவியை இழந்த அசோக்ஆனந்து தனது குடும்பத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என தெரிவித்து விட்டார். 

    இதனால் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ரியல் எஸ்டேட் அதிபர் புவனா என்ற புவனேஸ்வரன், நந்தா ஸ்ரீதரன் ஆகியோர் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் சொந்த அக்காள் மகன் செழியன் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. 

    பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ரங்கசாமி இன்று அறிவித்தார். ஆனால் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை ரங்கசாமி அறிவிக்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படாமலேயே நேரடியாக மனு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது. #rangasamy #nrcongress
    வாரணாசி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்னு தலைமையில் 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். #TNfarmers #Ayyakannu #AyyakannuagainstModi #ModiinVaranasi
    வாரணாசி:

    தமிழ்நாட்டு விவசாயிகளின் வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

    கடந்த 2017-ம் ஆண்டில் அய்யாக்கண்னு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் 100 நாள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  2018-ம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது மீண்டும் போராட்டம் நடத்தினர். ஆனால், தமிழக விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நேற்றிரவு பாஜக தலைமை வெளியிட்ட முதல் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வாரணாசி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்னு தலைமையில் 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அய்யாக்கண்ணு, தமிழ்நாட்டில் இருந்து சுமார் 300 விவசாயிகள் விரைவில் வாரணாசிக்கு சென்று நான் மற்றும் மேலும் 110 விவசாயிகள் மோடியை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்வோம் என தெரிவித்துள்ளார். #TNfarmers #Ayyakannu  #AyyakannuagainstModi #ModiinVaranasi
    ×