என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. #MadrasHC #MadrasHCdisqualifies
    சென்னை:

    கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது தி.மு.க. வேட்பாளராக டாக்டர் சரவணன்  போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸிடம் தோல்வி அடைந்தார்.

    ஏ. கே. போஸின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்தார்.



    அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

    தன்னை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற சரவணனின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பால், தற்போது தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு நடத்தப்படும் இடைத்தேர்தலுடன் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #MadrasHC #MadrasHCdisqualifies #ThirupparangkundramMLA #MLAAKBose #TNassemblypolls #2016polls
    பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. #ADMK #MGRAmmaDeepaPeravai #LSPolls
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவருமான தீபா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-


    மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆதரவு அளிக்கிறது.  அ.தி.மு.க. எதிர்கால நலன் மற்றும் வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது.

    சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.  
    அ.தி.மு.க நிர்வாகிகள் எங்களது ஆதரவை ஏற்றுக்கொண்ட பிறகே தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளேன்.  அ.தி.மு.க. தலைமையில் இருந்து அழைப்பு வந்தால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

    தேர்தலுக்கு பிறகு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.   #ADMK #MGRAmmaDeepaPeravai #LSPolls #Deepa
    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். #LokSabhaElections2019 #CandidatesNomination
    சென்னை:

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சியினரும் வேட்பாளர்களை தேர்வு செய்து, போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் அதிமுக திமுக ஆகிய கட்சிகள் ஒரே கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், மற்ற கட்சிகளிலும் பட்டியல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதிமுக, பாஜக, பாமக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.

    வேட்பு மனு தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர்கள் வருமாறு:

    ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் - டி ஆர் பாலு

    பொள்ளாச்சி திமுக வேட்பாளர்- சண்முக சுந்தரம்

    மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்-சு. வெங்கடேசன்

    கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர்- எல்.கே.சுதீஷ்

    தர்மபுரி பாமக வேட்பாளர்- அன்புமணி ராமதாஸ்



    திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் - மன்சூர் அலிகான்

    மதுரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்- பாண்டியம்மாள்

    கடலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்- சித்ரா

    புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் - என்.ஏ.எஸ். சுப்ரமணியன்

    ஈரோடு அதிமுக வேட்பாளர் - மணிமாறன்

    கன்னியாகுமரி  பாஜக வேட்பாளர் - பொன். ராதாகிருஷ்ணன்



    தென்சென்னை அதிமுக வேட்பாளர் - ஜெயவர்த்தன்

    தேனி அதிமுக வேட்பாளர் - ரவீந்திரநாத் ( ஒபிஎஸ் மகன் )

    வட சென்னை தேமுதிக வேட்பாளர் -  மோகன் ராஜ்

    புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் - வைத்தியலிங்கம் #LokSabhaElections2019 #CandidatesNomination


    சமூக செயற்பாட்டாளர் முகிலன் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகம் தான் பொறுப்பு என்று நடிகர் மன்சூர்அலிகான் கூறியுள்ளார். #mansooralikhan #mukilan #sterliteplant

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் ஆட்சிமாற்றம் வேண்டும் என்பதே நாடு முழுவதும் எதிரொலிக்கும் குரலாக உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கும் தோல்வியே கிடைக்கும். தற்போது மத்திய அரசை குறைகூறும் காங்கிரஸ் அரசும் ஆள்வதற்கு தகுதியற்ற அரசுதான்.

    தமிழகத்தில் சீமான் தலைமையிலான எங்களது அணிக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகி வருகிறது. மாற்றத்தை எங்களிடம் இருந்து கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களை தமிழகத்தில் காலூன்ற வைத்து நீராதாரத்தை மத்திய- மாநில அரசுகள் அழித்துவிட்டன. இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு அவர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை உள்பட தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினைகளுக்காக போராடி வந்தவர் முகிலன். தற்போது அவரை காணவில்லை. உயிரோடு உள்ளாரா? என்று கூட தெரியவில்லை. தொழில் நுட்பவசதி பெருகி உள்ள இந்த காலகட்டத்தில் மாயமான ஒருவரை கண்டுபிடிப்பது எளிதான காரியம்தான்.


    ஆனால் போலீசார் அக்கறை காட்டாமல் உள்ளனர். அவரை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் கடத்தி கொலை செய்து இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. அவரது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகம்தான் பொறுப்பு. எனவே போலீசார் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #mansooralikhan #mukilan #sterliteplant

    சித்திரை திருவிழா உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட 3 மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #LSPolls #HighCourt
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி பார்த்தசாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.



    இதேபோல் தேர்தல் நாளில் பெரிய வியாழன் பண்டிகை என்பதால், கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற வேண்டும் என பிஷப் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் புனித வாரம் வருவதால் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி மற்றொரு கிறிஸ்தவ அமைப்பும் வழக்கு தொடர்ந்திருந்தது.

    இவ்வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதேசமயம், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்திருப்பதாக கூறியது. கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளையும் மாற்ற மறுத்துவிட்டது. பிரார்த்தனைக்கு கிறிஸ்தவர்கள் எந்த சிரமமும் இன்றி சென்று வர போதிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்று, தேர்தலுக்கு எதிரான 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். எனவே, மதுரை மக்களவைத் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும். #LSPolls #HighCourt

    ‘நான் உங்கள் காவலாளி’ என்ற வாசகத்தை டுவிட்டரில் டிரென்ட் ஆக்கிய பிரதமர் மோடி இன்று ‘மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ என்னும் ஹேஷ்டாகுடன் புதிய பிரசாரத்தை தொடங்கியுள்ளார். #JantaMaafNahiKaregi #Modi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்புறம் காவலாளி என்று குறிப்பிடப்படும் ‘சவுக்கிதார்’ என்ற இந்தி சொல்லை அடைமொழியாக பயன்படுத்தினார்.

    மோடியை தொடர்ந்து அனைத்து மத்திய மந்திரிகளும், பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் முதல் மந்திரிகளும், இதர மந்திரிகளும், கோடிக்கணக்கான பாஜக பிரமுகர்களும்  ‘சவுக்கிதார்’ என்ற சொல்லை அடைமொழியாக பயன்படுத்தியதால் இந்த வார்த்தை டுவிட்டரில் பிரபலம் ஆனது.

    இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதிக்குள் கடந்த மாதம் 26-ம் தேதி இந்திய விமானப்படைகள் அத்துமீறி புகுந்து நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமான விளக்கம் அளிக்கப்படாததால் இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா பாகிஸ்தான் தேசிய நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘பாகிஸ்தானில் இருந்து 8 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து ஏதோ செய்து விட்டார்கள் என்பதற்காக நீங்கள் (இந்தியா) ஒட்டுமொத்த (பாகிஸ்தான்) நாட்டின்மீது எகிறிப்பாய முடியாது’ என கூறியதாக செய்திகள் வெளியாகின.

    இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்னும் தனிநாடு உருவாக வேண்டும் என 23-3-1940 அன்று லாகூர் நகரில் முஸ்லிம் லீக் கட்சி நிறைவேற்றிய வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் மாதம் 23-ம் தேதியை தேசிய நாளாக பாகிஸ்தான் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், சாம் பிட்ரோடா தெரிவித்த இந்த கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் அரசக்குடும்ப வாரிசுகள் முன்னர் நாடு இருந்த நிலையை மட்டுமே இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாத சக்திகளுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் முன்வந்ததில்லை. இப்போது இது புதிய இந்தியா - பயங்கரவாதிகளுக்கு வட்டியுடன் சேர்த்து அவர்களுக்கு புரியும் மொழியில் பதிலடி கொடுக்கப்படும்.

    பாகிஸ்தான் தேசிய நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதுடன் நமது நாட்டின் ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் ராகுலின் நெருங்கிய நண்பரும், நம்பிக்கைக்குரிய ஆலோசகருமான சாம் பிட்ரோடா அவமதித்துள்ளது மிகப்பெரிய வெட்கக்கேடு என மோடி குறிப்பிட்டுள்ளார்.



    இதற்காக #JantaMaafNahiKaregi (மக்கள் மன்னிக்க மாட்டார்கள்) என்னும் ஹேஷ்டாகை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள மோடி, நமது படைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சிறுமைப்படுத்தி வருகின்றன. 130 கோடி இந்தியர்களும்  இவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்பதை நாம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #JantaMaafNahiKaregi #Modi
    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ராமநாதபுரம்:

    கீழக்கரை அருகே திருப்புல்லாணி செக் போஸ்ட் மெயின் ரோட்டில் ராமநாதபுரம் தொகுதி பறக்கும்படை அலுவலர் முரளிதரன் தலைமையில் இன்று காலை வாகன சோதனை நடந்தது.

    அப்பேபாது ராமேசுவரத்தில் இருந்து கீழக்கரை நோக்கி வந்த பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதில் ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.53,600த்தை பறிமுதல் செய்தனர்.

    டிரைவர் கீழக்கரை முத்துசாமிபுரம் முருகன் மகன் கண்ணன்(வயது 36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதி பறக்கும்படை அலுவலர் கோபால் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டி குழுவினர், திருப்புல்லாணி செக் போஸ்டில் மேற் கொண்ட சோதனையில், கேரளாவில் இருந்து மீமிசல் நோக்கி சென்ற வாகனத்தில் ரூ.77 ஆயிரம் இருந்தது.

    சரியான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை கைப்பற்றி வண்டியின் ஓட்டுநர் மீமிசல் அய்யப்பன் (52) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து அந்த வழியாக வந்த ஏர்வாடி அருகே உள்ள சடைமுனியன்வலசையைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துக்குமார் என்பவரின் காரை சோதனை செய்தனர்.

    அப்போது அவர் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    சத்திரக்குடி டோல்கேட்டில் பறக்கும் படை அலுவலர் பானுபிரகாஷ் சோதனை நடத்தினார். அப்போது காரில் வந்த நாகநாதபுரம் வடக்குத்தெருவைச் சேர்ந்த ராவூத்தர் கனி (30) என்பவர் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். #LSPolls

    திருவள்ளூர் மாவட்டத்தில் உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக இதுவரை ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    திருவள்ளூர், மார்ச். 22-

    திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டரு மான மகேஸ்வரி ரவிக் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் திரு வள்ளூர் சட்டசபை தொகுதி களுக்கு, முகேஷ் கட்டாரியா (மொபைல் எண்: 89252 40311)

    பூந்தமல்லி, ஆவடி மற்றும் மாதவரம் சட்டசபை தொகுதிகளுக்கு பிரவீன் குமார் (மொபைல் எண். 89252 40310) ஆகியோர் செலவின மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் வேட்பா ளர்களின் செலவு விபரங் களை, தேர்தல் செலவின பார்வையாளர்களின் மொபைல் போன் எண் களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக இதுவரை ரூ. 1.05 கோடி பறிமுதல் செய் யப்பட்டு உள்ளது. இதில், உரிய ஆவணம் காட்டிய தால், ரூ. 1.13 லட்சம் ரூபாய் விடு விக்கப்பட்டது.

    மீதம் உள்ள ரூ. 1.04 கோடி பூந்தமல்லி அரசு கருவூ லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ. 10 லட் சம் மதிப்புள்ள குட்கா கைப் பற்றப்பட்டு, கவரைப் பேட்டை போலீஸ் நிலையத் தில் உள்ளது.

    ஓட்டுப்பதிவின் போது இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அடையாள அட்டையை காண்பித்து ஓட்டு அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    ஆப்பக்கூடல் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வாழைக்காய் வியாபாரியிடம் ரூ. 1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ஆப்பக்கூடல்:

    கேரள மாநிலம் குட்டி சிறா என்ற பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதிக்கு புஜூ என்பவர் வாழைக்காய் லோடு ஏற்றிக் கொண்டு ஈச்சேரில் வந்து கொண்டிருந்தார்.

    ஆப்பக்கூடல் அடுத்துள்ள அத்தாணி கை காட்டி பிரிவில் வந்த போது அங்கு தேர்தல் பறக்கும் படையினர் ஜெயக்குமார் என்பவர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஈச்சேர் மினி லாரியை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர் அப்போது ரூ.1½ லட்சம் கொண்டு வரப்பட்டதையும் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதே போல் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் நால் ரோடு பஸ் நிறுத்தம் முன் தேர்தல் பறக்கும் படையினர்(பெருந்துறை சட்டமன்ற தொகுதி) அதிகாரி மோகன சுந்தரம் தலைமையில் கொடுமுடி சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர் அதில் அந்தியூர் அருகே உள்ள ஆலமரத்து காடு பகுதியை சேர்ந்த செந்தில் குமார் (48) என்பவர் கன்னிவாடி சந்தைக்கு ஆடு வாங்க ரூ. 87050-ஐ எடுத்து கொண்டு சென்றார்.

    ஆனால் அந்த பணத்துக்கு ஆவணம் இல்லாததால் அதை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் பிறகு அதை பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. #LSPolls

    தெலுங்கு முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன்கல்யாணுக்கு ரூ.52 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #PawanKalyan
    விசாகப்பட்டினம்:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

    தெலுங்கு முன்னணி நடிகர் பவன்கல்யாண் அங்கு ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவர் சில சிறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறார்.

    பவன்கல்யாண் கஜுவாகா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அவர் நேற்று மனுதாக்கல் செய்தார்.

    அவர் தனது மனுவில் ரூ.52 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். அதில் ரூ.12 கோடிக்கு அசையும் சொத்துக்களும், ரூ.40 கோடிக்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அசையும் சொத்துக்களில் தனது மனைவி பெயரில் ரூ.30 லட்சம் சொத்தும், தன்னை சார்ந்தவர்களிடம் ரூ.1 கோடியே 51 லட்சம் சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் மனைவி பெயரில் ரூ.40 லட்சம் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தன்னிடம் ரூ.72 லட்சம் மதிப்புள்ள பென்ஸ்கார், ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள வால்வோ கார், ரூ.32 லட்சம் மதிப்புள்ள ஹார்லே டேவிட்சன் கார் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.27 லட்சத்துக்கு தனது பெயரிலும், ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மனைவி பெயரிலும் நகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் தனக்கு ரூ.33 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். 2013-14-ல் பவன்கல்யாண் தனக்கு ரூ.7 கோடியே 32 லட்சம் வருமானங்கள் இருந்ததாக வருமானவரி கணக்கில் தாக்கல் செய்துள்ளார். #PawanKalyan
    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 184 பேரில் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். #LSPolls #BJP
    புதுடெல்லி:

    கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளான பலர் இந்திய அரசியலில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ. என முக்கிய பதவிகளில் இருந்து வருகிறார்கள்.

    இவ்வாறு குற்றவாளிகள் அரசியலில் பதவிகளை பிடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்கள் அரசியலுக்கு வருவதை முழுமையாக தடுக்க முடியவில்லை.

    நாட்டில் உள்ள பல கட்சிகளும் கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் டிக்கெட் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

    இப்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் பல கட்சிகள் கிரிமினல் குற்றவாளிகளை வேட்பாளராக அறிவித்து உள்ளன.

    பாரதிய ஜனதா கட்சியிலும் கூட இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் பலர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களாக இருக்கின்றனர்.

    தற்போது பாரதிய ஜனதா தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் 184 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்களில் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். 184 பேரில் 78 பேர் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள் ஆவர்.

    ஏற்கனவே அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனு அடிப்படையில் இந்த 78 பேரில் யார்-யார்? கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற விவரம் கிடைத்துள்ளது. அதன் படிதான் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்கு உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    மற்ற 106 பேரில் யார்-யார் கிரிமினல் குற்றவாளிகள் என்பது அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு தான் தெரிய வரும்.

    35 பேரில் மராட்டிய மாநிலம் சந்திரபூர் தொகுதியில் போட்டியிடும் ஹன்ஸ் ராஜ் கங்காராம் மீதுதான் அதிக வழக்கு உள்ளது. அவர் மீது 11 கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஹன்ஸ் ராஜ் கங்காராம் தற்போது மத்திய உள்துறை இணை மந்திரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒடிசா மாநிலம் பால சோர் தொகுதி வேட்பாளர் பிரதாப் சாரங்கி மீது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    பாரதிய ஜனதா முன்னாள் தலைவரும் மத்திய மந்திரியுமான நிதின்கட்காரி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் மீது 5 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு முக்கிய தலைவர் சாக்‌ஷி மகராஜ் மீதும் கிரிமினல் வழக்கு உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவில் வெற்றி பெற்ற 282 பேரில் 98 பேர் மீதும், காங்கிரசில் வெற்றி பெற்ற 44 பேரில் 8 பேர் மீதும் கிரிமினல் வழக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. #LSPolls #BJP #BJPCandidates
    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். தஞ்சை தொகுதியில் ரெங்கசாமி மீண்டும் போட்டியிடுகிறார். #LSPolls #TTVDhinakaran #AMMK
    டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடந்த 17-ந்தேதி 9 சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.

    இதில் 9 சட்டசபை தொகுதியிலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்திருந்தார்.

    இன்று டி.டி.வி.தினகரன் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில் 8 சட்டசபை தொகுதிக்கான வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    1. சோளிங்கர்- மணி (வேலூர் கிழக்கு மாவட்ட நெமிலி ஒன்றிய கழக செயலாளர்)

    2. பாப்பிரெட்டிபட்டி- ராஜேந்திரன் (தர்மபுரி மாவட்ட கழக செயலாளர்)

    3. நிலக்கோட்டை (தனி)- தங்கதுரை (திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்)

    4. திருவாரூர்- காமராஜ்(திருவாரூர் மாவட்ட கழக செயலாளர்)

    5. தஞ்சாவூர்-ரெங்கசாமி (கழக பொருளாளர்)

    6. ஆண்டிப்பட்டி - ஜெயக்குமார் (ஆண்டிப்பட்டி ஒன்றிய கழக செயலாளர்)

    7. பெரியகுளம் (தனி)- கதிர்காமு (மருத்துவரணி தலைவர்)

    8. விளாத்திகுளம்- டாக்டர் ஜோதிமணி (தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான் மையினர் நலப்பிரிவு செயலாளர்).

    இந்த பட்டியலில் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், பழனியப்பன் ஆகியோர் எம்.பி. பதவிக்கு போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு பதில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், பாப்பிரெட்டி தொகுதிக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சோளிங் கர் தொகுதிக்கு ஒன்றிய செயலாளர் மணி நிறுத்தப்பட்டுள்ளனர்.

    விளாத்திகுளம் தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த உமா மகேஸ்வரி போட்டியிட விரும்பாததால் புதிதாக டாக்டர் ஜோதிமணி நிறுத்தப்பட்டுள்ளார்.

    தினகரன் அணியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் 17 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தட்டாஞ்சாவடி- முருகசாமி (புதுச்சேரி மாநில கழக வர்த்தக அணி செயலாளர்).

    புதுச்சேரி எம்.பி. தொகுதி வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. #LSPolls #TTVDhinakaran #AMMK

    ×