என் மலர்

  செய்திகள்

  31 குற்ற வழக்குகள் உள்ள ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஓட்டு போட வேண்டுமா?- சந்திரபாபு நாயுடு காட்டம்
  X

  31 குற்ற வழக்குகள் உள்ள ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஓட்டு போட வேண்டுமா?- சந்திரபாபு நாயுடு காட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  31 கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா? என சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினார். #LSPolls #ChandrababuNaidu #JaganMohanReddy
  அமராவதி:

  ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று கட்சி தலைவர்களிடையே டெலிகான்பரன்ஸ் மூலம் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

  பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தாக்கல் செய்த வேட்பு மனுவுடன்  தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், அவர் மீது 31 குற்றவழக்குகள் உள்ளதாக கூறியுள்ளார். நாட்டில் எந்த ஒரு தலைவருக்கும் இந்த அளவுக்கு குற்ற வழக்குகள் இருந்திருக்காது. இப்படி 31 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு தலைவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா?  ஜெகன் மோகன் ரெட்டி மூலம் ஆந்திராவில் அதிகாரம் செலுத்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் முயற்சி செய்கிறார். ஆந்திராவில் உள்ள வளங்களைப் பார்த்து ஜெகன் மூலம் அதிகாரங்களை கைப்பற்ற முயற்சி மேற்கொள்கிறார்.  ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தை சந்திரசேகர் ராவிடம் கொடுத்துவிடுவார் என மக்கள் பயப்படுகிறார்கள்.

  தெலுங்கானா முதலமைச்சர் தனது தவறான செயல்பாடுகளால் ஐதராபாத்தின் பெருமையை அழித்துவிட்டார். எனவே, ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரசேகர்  ராவுக்கும் பொதுத் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்.

  இவ்வாறு அவர் பேசினார். #LSPolls #ChandrababuNaidu #JaganMohanReddy
  Next Story
  ×