என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாவூர்சத்திரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
  X

  பாவூர்சத்திரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்ராஜ் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
  • செந்தில்முருகன் தனது மகனை சத்தம் போட்டுள்ளார்.

  நெல்லை:

  பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூரை சேர்ந்தவர் செந்தில் முருகன். விவசாயி. இவரது மகன் அருள்ராஜ்(வயது 18). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது தந்தைக்கு உதவியாக தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

  நேற்று மாலை வீட்டின் மாடியில் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்ராஜ் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நேற்று வயலில் வெண்டைக்காய் பறிக்க தனது தந்தையுடன் அருள்ராஜ் சென்றுள்ளார்.ஆனால் அங்கு வைத்து செல்போனை அதிகம் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் செந்தில்முருகன் தனது மகனை சத்தம் போட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அருள்ராஜ் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×