என் மலர்
விருதுநகர்
- அரசின் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி சிவகாசி ஊராட்சி ஒன்றியம் சுக்கிரவார்பட்டி ஊராட்சி ஆதி வீரன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.50 இலட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் தூர்வரப்பட்டு வரும் வரும் பணிகளையும், விஸ்வநத்தம் ஊராட்சி ஓ.பி.ஆர் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.77 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை கட்டப்பட்டு வருவதையும், பூச்சன்காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.49.78 லட்சம் மதிப்பில் கால்வாய் கட்டப்பட்டு வரும் பணிகளையும், விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 15- வது மானிய நிதி குழுவின் ரூ.48 ஆயிரம் மதிப்பில் சமையல் கூடம் புரணமைக்கப்பட்டுள்ள பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆனையூர் ஊராட்சி லட்சுமிபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.82 லட்சம் மதிப்பில் செங்குளம் கண்மாய் வரத்து கால்வாய் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நடை பெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வட்டாட்சியர் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வை யாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- காலை உணவு விரிவாக்க திட்டத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- கிளை செயலாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், சீதாராமன், வைரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் சேத்தூர் பேரூராட்சி யிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்ட உயர்தர (ஸ்மார்ட்) வகுப்பறையை இருவரும் தொடங்கி வைத்தனர்.
விழாவில் தலைமை ஆசிரியர் லட்சுமி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிர மணியன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்த குமார், ராமமூர்த்தி செயல் அலுவலர் சந்திராகலா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், துணை சேர்மன்கள் துரை கற்பக ராஜ், காளீஸ்வரி, மாரிச் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் குமார், கிளை செயலாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், சீதாராமன், வைரவன், மகளிரணி சொர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி 56 வீட்டு காலனியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மனைவி ஐஸ்வர்யா(வயது31). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்களாகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் அவரது தாய் சீதாலட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர்கள்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் கலைஞர் நகரை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது35). இவரது மனைவி சங்கீதா. லட்சுமணன் வீட்டின் அருகே நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது நண்பர்கள் தம்பிகுமார், முத்து ஆகியோருடன் சேர்ந்து அவரை வழி மறித்துள்ளார். லட்சுமணன் அவர்களிடம் ஏன் வழிமறிக்கிறீர்கள்? என கேட்டபோது தனது சகோதரியுடன் பேச கூடாது என கூறி ஆனந்த், லட்சுமணனை கண்டித் துள்ளார்.
அதற்கு தான் பேசவில்லை என கூறி லட்சுமணன் மறுத்துள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த ஆனந்த் மற்றும் நண்பர்கள் லட்சு மணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லட்சுமணன் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து லட்சும ணனின் தந்தை விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி தனியார் கல்லூரி பகுதியை சேர்ந்தவர் கனிபாண்டி(50), ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கனிபாண்டியின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிபட்டி தெருவை சேர்ந்தவர் சங்கர லிங்கம்(78). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நல பாதிப்பு இருந்து வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டயக் கணக்காளர்கள் சங்கத்துடன் காளீஸ்வரி கல்லூரி ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
- இதற்கான ஏற்பாடுகளை பாபு பிராங்கிளின் செய்தி ருந்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இளங்கலை வணிகவியல் துறை மற்றும் பட்டயக் கணக்காளர்கள் சம்மேளன சிவகாசி கிளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி முதல்வர் பால முருகன் தலைமை தாங்கி னார். துறை தலைவர் குருசாமி வாழ்த்தி பேசி னார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் பாலமுருகன், இந்திய பட்டயக் கணக்காளர்கள் சம்மேளனம் சிவகாசி கிளை தலைவர் பால முருகன், செயலர் சுரேஷ் சந்தர், பொருளாளர் அருள்மொழி வர்மன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டு மாணவர் அவி னாஷ் வரவேற்றார். மாணவி சங்கீதப்பிரியா சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி பேசினார். மாணவி பெமினா கேத்திரின் நன்றி கூறினார். மாணவிகள் சங்கீதப்பிரியா, ஸ்ரீமலர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை பாபு பிராங்கிளின் செய்தி ருந்தார்.
- சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர்
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகரில் நாளை (26-ந்தேதி) விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்து கொள்பவர்கள் அடையாள அட்டை, அனைத்து கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடு நர்கள் https://forms.gle/TH4R1Djmv8Z7SkpU என்ற கூகுள் பார்மில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்ற வர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது.
இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- கிராம நிர்வாக அதிகாரி மீது தாக்குதல் நடத்திய வருவாய்த்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு எஸ்.கல்லுப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வருவாய்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க தலைவர் தெய்வமணி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் பத்மநாதன் முன்னிலை வகித்தார்.
மாநில அமைப்பு செயலாளர் சுந்தர்ராஜன், ஆர்ப்பாட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி சிவனாண்டி, வட்டத் தலைவர் அழகர், வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், நில அளவை ஒன்றியம் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின்போது எஸ்.கல்லுப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சட்டநாதனை தாக்கிய நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
- திருச்சுழி அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
- நடுகல்லில் இரண்டு உருவங்கள் சிற்பமாக செதுப்பட்டுள்ளன.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் தும்மு–சின் னம்பட்டி கிராமத்தில் ஒரு பழமையான சிலை இருப் பதாக குலசேகர–நல்லூ–ரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கொடுத்தார். அதன்பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான ஸ்ரீதர், முனைவர்கள் தாமரைக் கண்ணன், செல்லபாண்டி–யன் போன்றோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அவை ஆயி–ரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியரின்சிற் பம் என்பது தெரியவந் தது.இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், நமது முன்னோர்கள் வீரத்தில் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக நினைவு கற் களை நட்டு வைத்து வழி–பட்டு வந்துள்ளனர். அந்த கற்கள் தொடக்கத்தில் ஒழுங்கற்ற வையாகவும், உயரமாகவும் இருந்தன. அதை நெடுங்கல் என்று அழைப்பர்.
இந்த நெடுங்கல் வழி–பாட்டின் தொடர்ச்சியாக நடுகல் வழிபாட்டை கூற–லாம்.இந்த நடுகற்களில் கல்வெட்டுகள், உருவங்கள் எவையேனும் ஒன்று இடம் பெற்றிருக்கும் அல்லது இரண்டுமே இடம்பெற்று இருக்கும்.
தற்போது நாங்கள் கண்ட–றிந்த நடுகல்லில் இரண்டு உருவங்கள் சிற்பமாக செதுப்பட்டுள்ளன. ஒன் றரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக் கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு வீரர்கள் அள்ளி முடிந்த கொண்டை–யுடனும், காதுகளில் பத்திர குண்டலங்களும், இடையில் இடைக்கச்சையும் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் வலது புறம் உள்ள வீரனின் வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் இடம்பெற்றுள்ளது.
இடதுபுறம் உள்ள வீர–னின் வலதுகையில் வாள் போன்ற ஆயுதமும், இடது கையில் ஒரு ஆயுதமும் ஏந்தி போர் புரியும் வீரர்கள் போன்று சிற்பம் முற்கால பாண்டியருக்கே உரிய கலைபாணியில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் உருவ அமைப்பை வைத்துப் பார்க் கும்போது அக்காலத்தில் இப்பகுதியில் நடந்த பூசலில் ஈடுபட்டு ஊர் நலனுக்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறினர்.
- மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விருதுநகர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் கவிதா வழக்கு தொடர்ந்தார்.
விருதுநகர்
விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் கவிதா. இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன்நகரை சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதற்காக 7 பவுன் நகைகள், ரூ.50ஆயிரத்தை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். மேலும் திருமணத்திற்காக ரூ.1லட்சம் வரை செலவு செய்தனர். இந்த நிலையில் ராஜாராம் தினமும் மது குடித்து விட்டு வந்து கவிதாவுடன் தகராறு செய்து வந்தார். அத்துடன் பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு மனைவியிடம் வற்புறுத்தி உள்ளார். இதனால் மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
மேலும் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அழைத்து பேசியபோது மனைவியை பிரிந்து வாழ்வதாகவும், அவருக்கு 5 பவுன் நகைகள்,ரூ.1½ லட்சம் தருவதாகவும் ராஜாராம் எழுதி கொடுத்தார். ஆனால் பணம், நகை தரவில்லை. இந்த நிலையில் கவிதாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்த அவர், பணம் தரமுடியாது என கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விருதுநகர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் கவிதா வழக்கு தொடர்ந்தார். விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் ராஜாராம் மீது வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- ஆணழகன் போட்டியில் பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர் சாதனை படைத்தனர்.
- இப்போட்டியானது 7 பிரிவுகளாக நடைபெற்றது.
சிவகாசி
தமிழ்நாடு அமெச்சூர்பாடி பில்டிங் அசோசியேஷன் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான மிஸ்டர் விருதுநகர் என்ற தலைப்பில் ஆணழகன் போட்டி சிவகாசியில் நடந்தது. இப்போட்டியானது 7 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 70 கிலோ பிரிவில் பி.எஸ்.ஆர்.என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் ஜெயகணேஷ் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவனுக்கு கல்லூரி இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பேராசிரியர் முனிராஜ் பேராசிரியை கிருஷ்ணவேனி மற்றும் பலர் பாராட்டினர்.
- குழந்தை சாதனையாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர்
தேசிய அளவில் வீரதீர செயல் கள், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் பண்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கவுரவப்ப டுத்தும் வகையில் 2024-ம் ஆண்டிற்கான பிரதான் மந்திரி ராஸ்ட்ரிய பால் புரஸ்கார் விருது மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படவுள்ளது.
இவ்விருது வீரதீர செயல் புரிந்த குழந்தைகளுக்கான விருது மற்றும் சிறந்த குழந்தைகளுக்கான விருது என 2 பிரிவுகளாக வழங்கப்பட வுள்ளது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://award.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்தியக்குடிமகனாக இருத்தல் வேண்டும், இந்தியா வில் வசிப்பவராக இருத்தல் வேண்டும், விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான 31-ந்தேதியன்று 18 வயதிற்குள் இருத்தல் வேண்டும், கடந்த 2 ஆண்டுகளுக்குள் விருதிற்கான சிறந்த செயல் மற்றும் சாதனை செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- விருதுநகரில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்பட பலர் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
சாலைகளில் உரிய அனுமதியின்றி அமைத்துள்ள வேகத் தடைகளை அகற்றவும், சாலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டத்தில் அறிவுறுத்தப் பட்டது. பள்ளிகளில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாதம் முதல் வெள்ளிக் கிழமை அன்று தொடர்ந்து காவல்துறை மூலம் நடத்தப்படுகிறது.
மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை பணியாளர்கள் தக வல் தெரிவிக்க வேண்டும், போதை பொருள் விற்பனை மற்றும் பதுக்கி வைத்தல் தொடர்பாக வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் குழு கண்கா ணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் குரு பூஜை, இமானுவேல் சேகரன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், கோட்டப் பொறியாளர்(நெடுஞ்சாலை மற்றும் கட்டிட பராமரிப்பு) பாக்கியலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொறுப்பு) அனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வருவாய் கோட்டாட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






