என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை
- வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி முத்துராமலிங்கம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(வயது28),பட்டாசு கடையில் வேலை பார்த்தார். இவரது மனைவி மாலதி(24). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் கூட்டுறவு வங்கியில் சுந்தரம் கடன் வாங்கினார்.
இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பக்க அறையில் மனைவி தூங்கி கொண்டிருந்தார். கண்விழித்த போது கணவர் இருந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டி கிடந்தது. மாலதி கதவை தட்டி பார்த்தார். ஆனால் கணவர் பதிலளிக்கவில்லை. சந்தேகமடைந்த அவர் அந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது சுந்தரம் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் இடைபொட்டல் தெருவை சேர்ந்தவர் நவீன்(22). இவர் கல்லூரியில் படித்தபோது ஒரு பெண்ணை காதலித்தார். படிப்பு முடிந்த பின்னர் அவரது வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை திருணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






