என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஸ்வநத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் புனரமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
அரசின் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
- அரசின் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி சிவகாசி ஊராட்சி ஒன்றியம் சுக்கிரவார்பட்டி ஊராட்சி ஆதி வீரன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.50 இலட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் தூர்வரப்பட்டு வரும் வரும் பணிகளையும், விஸ்வநத்தம் ஊராட்சி ஓ.பி.ஆர் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.77 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை கட்டப்பட்டு வருவதையும், பூச்சன்காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.49.78 லட்சம் மதிப்பில் கால்வாய் கட்டப்பட்டு வரும் பணிகளையும், விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 15- வது மானிய நிதி குழுவின் ரூ.48 ஆயிரம் மதிப்பில் சமையல் கூடம் புரணமைக்கப்பட்டுள்ள பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆனையூர் ஊராட்சி லட்சுமிபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.82 லட்சம் மதிப்பில் செங்குளம் கண்மாய் வரத்து கால்வாய் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நடை பெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வட்டாட்சியர் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வை யாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.






