போதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் கைது

போதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீசாரை கைது செய்தனர்.போலீசார் வர தாமதமானதால் கோப மடைந்ததால் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் திரண்டிருந்த காட்சி.
கிராம மக்கள் திரண்டிருந்த காட்சி.
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் உடையனாம்பட்டி கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு பஸ்சில் வந்துள்ளார்.அப்போது காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலராக வேலை பார்க்கும் பெரியதம்பி என்பவர் போலீஸ் உடையில் சித்தலக்குண்டு பஸ் நிறுத்தத்தில் ஏறினார்.

அவர் பஸ்சுக்குள் வந்து நின்ற போது குடி போதையில் இருப்பதை பார்த்து பயணிகள் முகம் சுளித்தனர். அப்போது அவர் நின்றிருந்த இடத்தின் அருகிலிருந்த அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளிகாட்டி கொள்ளாமல் குலசேகர நல்லூர் பஸ் நிறுத்தத்தில் அந்த பெண் இறங்கி சென்றார். பின்னர் தனது கிராமத்தினரிடம் போலீஸ் காரரின் நடத்தை குறித்து கூறியுள்ளார்.

உடனடியாக கிரா மத்தினர் அந்த பஸ்சை பின் தொடர்ந்து சென்று வழிமறித்தனர். பஸ்சுக்குள் சென்று போதையில் இருந்த போலீஸ்காரரிடம் பெண்ணிடம் சில்மிஷம் செய்தது குறித்து கேட்டுள்ளனர். ஆனால் அவர், கிராமத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் மஞ்சம்பட்டி பஸ் நிறுத்தத்தில் போலீஸ் காரரை இறக்கிவிட்டு சிறை பிடித்தனர். மேலும் திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் வர தாமத மானதால் கோப மடைந்ததால் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சுழி- அருப்புக் கோட்டை சாலையில் அரைமணி நேரத்திற்கு மேல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சுழி போலீசார் பொதுமக்களை சமரசம் செய்து பெரியதம்பியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் சில்மிசம் செய்தது குறித்து பாதிக்கப்பட்ட பெண் திருச்சுழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியதம்பியை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com