என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.7½ லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம்
- ரூ.7½ லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
- நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய கலை யரங்க கட்டிடத்தை திறந்து வைத்தார்.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தில் ரூ 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. யூனியன் தலைவர் முத்து மாரி தலைமை வகித்தார். யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய கலை யரங்க கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட கலை இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் வாலை முத்துச்சாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் தங்கப்பாண்டியன், மாவட்ட பிரதி சங்கர பாண்டியன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய துணைச் செய லாளர் கீழ உப்பிலிக்குண்டு குருசாமி ஒன்றிய கவுன்சி லர்கள் சேகர், சிதம்பர பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






