என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தன்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறினார்.
    • பாலியல் தொல்லையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த சிறுமி, அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி அந்த பெண்ணின் தந்தைக்கு தகவல் கொடுத்தார். வேலைக்கு சென்றிருந்த அவர் வீட்டுக்கு வந்து உறவினர்களுடன் தனது மகளை தேடினார்.

    காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்தபோது மகளின் ஆடை, செல்போன் ஆகியவை கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அந்தப்பகுதியில் தீவிரமாக தேடிப்பார்த்த போது அந்த சிறுமி தந்தையின் குரலை கேட்டு அழுத படி வந்தார். அப்போது அவர் பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டியராஜன் (வயது30) என்பவர் தன்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை மகளுக்கு நடந்த கொடுமை குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியராஜனை கைது செய்தனர். இதற்கிடையே பாலியல் தொல்லையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    • மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தாய்-மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.
    • இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியை சேர்ந்தவர் சங்கரி(வயது62). இவரது மகன் ஆனந்த்(26). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் விருதுநகர் நோக்கி வந்து கொண்டி ருந்தனர். அதேவேளையில் பாலவநத்தத்தை சேர்ந்த ரஞ்சித்(28), அழகுமணி(25) ஆகியோர் விருதுநகரில் இருந்து பாலவநத்தத்தை நோக்கி சென்று கொண்டி ருந்தனர். இவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகரை அடுத்த தனியார் கல்லூரி அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேராக பயங்கரமாக மோதி கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் படுகாயமடைந்த சங்கரி, ஆனந்த், ரஞ்சித் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    மேலும் உயிருக்கு போராடிய அழகுமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி கிழக்கு போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.7½ லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
    • நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய கலை யரங்க கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தில் ரூ 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. யூனியன் தலைவர் முத்து மாரி தலைமை வகித்தார். யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய கலை யரங்க கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட கலை இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் வாலை முத்துச்சாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் தங்கப்பாண்டியன், மாவட்ட பிரதி சங்கர பாண்டியன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய துணைச் செய லாளர் கீழ உப்பிலிக்குண்டு குருசாமி ஒன்றிய கவுன்சி லர்கள் சேகர், சிதம்பர பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து மாணவர்களை உயர் கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
    • மாவட்டத்தில் உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் மற்றும் மெல்ல கற்போர் கையேடு வெளியிடுதல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.

    அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மெல்ல கற்போர் மாணவர்களுக்கான கையேட்டினை அவர் வெளியிட்டார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.

    தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம், வாயிலாக உயர்கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்தும், உதவித்தொகைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    மேலும், பொருளா தாரத்தில் பின்தங்கிய மாண வர்களை கண்டறிந்து, தொண்டு நிறுவனங்கள் மூலம் உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மாவட்டத்தில் உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    இதில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழைய பொருட்கள் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்து குறித்து பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகரை சேர்ந்தவர் ஜெய்சங்கர். விருதுநகர்- சாத்தூர் மெயின் ரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை அருகே இவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் உள்ளது.

    இங்கு பழைய இரும்பு, பேப்பர் மற்றும் பொருட் களை வாங்கி வைத்து வியா பாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலையில் நிறுவன வளா கத்தில் குவித்து வைக்கப் பட்டிருந்த பொருட்களில் இருந்து புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் மளமள வென எரிய தொடங்கியது. அங்கிருந்தவர்கள் உடனடி யாக போலீசுக்கும், தீயணைப்பு துறையின ருக்கும் தகவல் கொடுத்தனர். மேலும் ஜெய்சங்கருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமள வென எரிய தொடங்கியது. அவர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெவ்வேறு விபத்துகளில் வாலிபர்-முதியவர் பரிதாபமாக இறந்தனர்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆலங்குளம் பெரு மாள்கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது18). இவர் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் பகுதிக்கு சென்றுவிட்டு வெம் பக்கோட்டை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பாறைப்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை ராஜா கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் காளையப்பன்(57). இவர் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சிவகாசிக்கு வந்து கொண்டி ருந்தார். மீனம்பட்டி அருகே வந்தபோது அவருக்கு முன்னாள் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. வேன் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வேனின் பின்னால் பயங்கர மாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட காளியப்பன் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே காளியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் வேனை ஓட்டி வந்த சாத்தூர் மேட்டுபட்டியை சேர்ந்த மாணிக்கவேல் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீசாரை கைது செய்தனர்.
    • போலீசார் வர தாமதமானதால் கோப மடைந்ததால் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் உடையனாம்பட்டி கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு பஸ்சில் வந்துள்ளார்.அப்போது காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலராக வேலை பார்க்கும் பெரியதம்பி என்பவர் போலீஸ் உடையில் சித்தலக்குண்டு பஸ் நிறுத்தத்தில் ஏறினார்.

    அவர் பஸ்சுக்குள் வந்து நின்ற போது குடி போதையில் இருப்பதை பார்த்து பயணிகள் முகம் சுளித்தனர். அப்போது அவர் நின்றிருந்த இடத்தின் அருகிலிருந்த அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வெளிகாட்டி கொள்ளாமல் குலசேகர நல்லூர் பஸ் நிறுத்தத்தில் அந்த பெண் இறங்கி சென்றார். பின்னர் தனது கிராமத்தினரிடம் போலீஸ் காரரின் நடத்தை குறித்து கூறியுள்ளார்.

    உடனடியாக கிரா மத்தினர் அந்த பஸ்சை பின் தொடர்ந்து சென்று வழிமறித்தனர். பஸ்சுக்குள் சென்று போதையில் இருந்த போலீஸ்காரரிடம் பெண்ணிடம் சில்மிஷம் செய்தது குறித்து கேட்டுள்ளனர். ஆனால் அவர், கிராமத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அங்கு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் மஞ்சம்பட்டி பஸ் நிறுத்தத்தில் போலீஸ் காரரை இறக்கிவிட்டு சிறை பிடித்தனர். மேலும் திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் வர தாமத மானதால் கோப மடைந்ததால் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் திருச்சுழி- அருப்புக் கோட்டை சாலையில் அரைமணி நேரத்திற்கு மேல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சுழி போலீசார் பொதுமக்களை சமரசம் செய்து பெரியதம்பியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் சில்மிசம் செய்தது குறித்து பாதிக்கப்பட்ட பெண் திருச்சுழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியதம்பியை கைது செய்தனர்.

    • பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு களித்தனர்.
    • பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி துணைமாலை–யம்மன் சமேத திருமேனி–நாதர் சுவாமி கோவிலில் பிட்டுத்திருவிழா வெகு விம–ரிசையாக நடைபெற்றது. வந்தியம்மை என்ற பிட்டு பலகாரம் விற்கும் மூதாட் டிக்கு உதவி செய்ய எண்ணி மனித உருவில் வந்த சிவ–பெருமான், மூதாட்டி தந்த பிட்டை கூலியாக பெற்றுக் கொண்டு வேலை செய்ய ஆற்றங்கரை சென்றார்.

    ஆனால் பிட்டு சாப்பிட்ட மயக்கத்தில் மரத்தடியில் உறங்கிய சிவபெருமானை பாண்டிய மன்னன் பிரம் பால் அடித்த திருவிளையா–டலை உணர்த்துவதே இந்த பிட்டுக்கு மண் சுமந்த பட–லம் ஆகும். உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடி–யாக உதவ வருவேன் என் பதை உணர்த்தவும் ஒவ் வொரு ஆண்டும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா அனைத்து சிவாலயங்களி–லும் விமரிசையாக கொண் டாடப்படுகிறது.

    அந்த வகையில் இந்த திருமேனிநாதர் சுவாமி கோவிலிலும் பிட்டுத்திரு–விழா திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரிசையாக நடை–பெற்றது. இந்த பிட்டுத் திருவிழாவை நூற்றுக்க–ணக்கான பக்தர்கள் கண்டு களித்து சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதன் பின்னர், சுவாமி மற்றும் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த பிட்டுத் திருவிழாவில், திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்மனைத் தரிசனம் செய்தனர்.

    • வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி முத்துராமலிங்கம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(வயது28),பட்டாசு கடையில் வேலை பார்த்தார். இவரது மனைவி மாலதி(24). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் கூட்டுறவு வங்கியில் சுந்தரம் கடன் வாங்கினார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பக்க அறையில் மனைவி தூங்கி கொண்டிருந்தார். கண்விழித்த போது கணவர் இருந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டி கிடந்தது. மாலதி கதவை தட்டி பார்த்தார். ஆனால் கணவர் பதிலளிக்கவில்லை. சந்தேகமடைந்த அவர் அந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது சுந்தரம் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் இடைபொட்டல் தெருவை சேர்ந்தவர் நவீன்(22). இவர் கல்லூரியில் படித்தபோது ஒரு பெண்ணை காதலித்தார். படிப்பு முடிந்த பின்னர் அவரது வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை திருணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடக்கிறது.
    • இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    விருதுநகர்

    விருதுநகர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன், மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகரில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி கூட்டத்திற்கு வரவுள்ளதை முன்னிட்டு விருதுநகரில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், செல்வமணி ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள்.

    தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட செயலாளர், நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பா ளர்கள், மாவட்ட பிரதி நிதிகள், கட்சி முன்னோடி கள் கலந்து கொள்கின்றனர்.

    கூட்டத்தில் விருதுநகரில் நடைபெற உள்ள இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்குதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
    • போதையில் இருந்ததாக கூறி 2002-ம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் சுமதி. இவர் கடந்த 2016-ம் ஆண்டில் மதுரை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-

    எனது கணவர் தலைமை காவலராக பணிபுரிந்தார். பணியின்போது போதையில் இருந்ததாக கூறி 2002-ம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் பணியில் சேர்க்குமாறு கோரி பலமுறை மனு அளித்தும் ஏற்கப்படவில்லை.

    இந்த நிலையில் 2009-ல் அவர் உயிரிழந்தார். இதையடுத்து என் கணவருக்கு கிடைக்க வேண்டிய கருணை தொகையை கேட்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் கருணை தொகை வழங்கும்படி 2016-ல் தீர்ப்பளிக்கப்பட்து. ஆனால் கருணை தொகை வழங்கப்படவில்லை. எனவே எனக்கு கருணை தொகை வழங்கும்படி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி பட்டுதேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில், கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இப்போதும் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்படு கிறது. இதனால் விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த பணத்தை தமிழ்நாடு புதுச்சேரி சேமநல நிதிக்கு வழங்கி அதற்கான ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கை தாமதப்ப டுத்திய போலீஸ் சூப்பிரண்டு பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்றிருந்தாலும் அவரிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும் என கூறி வழக்கை வருகிற 9-ந்தேதிக்கு தள்ள வைத்தார்.

    • மரக்கிளை தலையில் விழுந்து வாலிபர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது22). சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று வெம்பக்கோட்டை ரோட்டில் வேனில் வந்து கொண்டிருந்தார். வனமூர்த்திலிங்காபுரம் அருகே வந்தபோது மரக்கிளை முறிந்து வேன் மீது விழுந்தது.

    இதையடுத்து வேனை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தனது சகோதரர் பாலகுருநாதனை செல்போனில் அழைத்து அங்கு வருமாறு கூறினார்.அவர் அங்கு வந்தவுடன் இருவரும் சேர்ந்து வேனில் விழுந்து கிடந்த மரக்கிளைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மாரிமுத்து வேன் மீது ஏறி நின்று மரக்கிளைகளை எடுத்து கொடுக்க பாலகுரு நாதன் அதனை வாங்கி தரையில் வைத்து கொண்டி ருந்தார். அப்போது ஒரு மரக்கிளை எதிர்பாராத விதமாக பாலகுருநாதனின் தலையில் விழுந்தது. இதனால் படுகாயமடைந்த பாலகுருநாதனை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெம்பக் கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×