என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கோவில்பட்டியை புதிய மாவட்டமாக அறிவிக்க அரசு திட்டமா?
    • பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    சிவகாசி

    கோவில்பட்டி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் கோவில்பட்டி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது எனவும் அதில் வெம்பக்கோட்டை, சாத்தூர், இணைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. அவ்வாறு இணைக்கப்பட்டால் சாத்தூர், வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சிவகாசி பட்டாசு என்ற அடையாளம் என்பது அழிந்து விடுமோ என கவலை அடைந்துள் ளனர். அவ்வாறு கோவில்பட்டி மாவட்டத்தில் இணைக்கப்பட்டாலும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் கோவில்பட்டி மாவட்டம் முழுமையாக அறிவிப்பு வரும் முன்னர் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கருத்து தெரிவித்தனர். தாயில்பட்டி, வெற்றிலை யூரணி, சுப்பிர மணியபுரம், ஆகிய பகுதியை சேர்ந்த வர்கள் வெம்பக்கோட்டை தாலுகா வில் இல்லை. ஆனால் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ளனர். சிவகாசி தாலுகாவில் உள்ளனர். சாத்தூர், வெம்பக் கோட்டை ஆகிய பகுதிகள் புதிதாக அறிவிக்கப்படும் கோவில்பட்டி மாவட் டத்துடன் இணைக் கப்படும் என்ற வதந்தி அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.

    • விருதுநகர் மாவட்டத்தில் நவீன சலவை கூடங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
    • குழுவிலுள்ள பயனாளி களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.

    குழு உறுப்பினர்களின் குறைந்த பட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். குழுவில் 10 நபர்கள் இருக்க வேண்டும். குழுவிலுள்ள பயனாளி களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    விருப்பமும், முன் அனுபவமுள்ளவர்கள் குழுவாக சேர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாட்கோ மூலம் ரூ.32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • மேலாளர் சுகுமாரன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன், தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டிகளையும், தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதா ரர்களின் மனுவை உடனடி யாக பரிசீலனை செய்து 1 பயனாளிக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் இலவச தையல் எந்தி ரத்தையும் கலெக்டர் வழங்கினார்.முன்னதாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் டிராக்டர், லோடு வாகனம், கறவை மாடு வாங்குவதற்கும், பால் பண்ணை அமைப்பதற்கும் என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.32.70 லட்சம் மதிப்பிலான காசோ லைகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) அனிதா, மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், மாவட்ட தாட்கோ மேலாளர் சுகுமாரன், மாற்றுத் திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவருக்கு உதவித்தொகையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • குடும்ப சூழ்நிலையால் புத்தகம், கல்வி கட்டணம் செலுத்த உதவுமாறு கோரிக்கை வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். அப்போது மகாலிங்கம் என்ற மாணவர் எம்.எல்.ஏ.வை சந்தித்து தான் நீட் தேர்வில் வெற்றி பெற்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது. குடும்ப சூழ்நிலையால் புத்தகம், கல்வி கட்டணம் செலுத்த உதவுமாறு கோரிக்கை வைத்தார். இதனை பரிசீலிப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.

    இந்த நிலையில் நேற்று அந்த பள்ளிக்கு சென்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., மாணவர் மகாலிங்கத்தை சந்தித்து கல்வி உதவித்தொகையாக தனது ஒருமாத ஊதியம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை தங்கபாண்டியன்

    எம்.எல்.ஏ. வழங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவர் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி கூறினார். அப்போது தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், சிறந்த முறையில் மருத்துவக்கல்வி பயின்று ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை ஆற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

    மேலும் நீட் தேர்வு ரத்து செய்ய முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஷ்வரி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிர மணியன், செயல் அலுவலர் சந்திரகலா பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி மாரிச்செல்வம் , ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் மாணவரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • கடனை திருப்பி கேட்ட தம்பதிக்கு அடி-உதை விழுந்தது.
    • விருதுநகர் மேற்கு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சேர்ந்தவர் சரண்யா (வயது33). இவரது கணவர் ரத்தினராஜின் தாய் மற்றும் அண்ணன் கிருஷ்ணன் குடும்பத்தினர் விருதுநகரில் உள்ளனர். அவர்களது தேவைக்காக ரத்தின ராஜிடம் ரூ.41 லட்சம் கடன் வாங்கி யுள்ளனர். நீண்ட நாட்களா கியும் பணத்தை திருப்பித்தர வில்லை.

    இந்தநிலையில் திருப்போரூரில் ரத்தினராஜ் சொந்தமாக வீடு கட்டத் தொடங்கி யுள்ளார். அதற்கு பணம் தேவைப்பட்டதால் அண்ணனிடம் கடனை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் ஊருக்கு வருமாறு கூறினார்.

    ரத்தினராஜூம் ஊருக்கு சென்று பேசியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் பணம் கிடைக்கவில்லை.

    இதையடுத்து விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரத்தினராஜ் புகார் கொடுத்தார். இதையடுத்து மீண்டும் கிருஷ்ணன் குடும்பத்தினர், ரத்தினராஜை ஊருக்கு வருமாறு அழைத்தனர். ரத்தினராஜ் தனது மனைவியுடன் ஊருக்கு வந்தார். கிருஷ்ணன் வெளியே சென்றிருந்த போது அவரது தாயார் நிர்மலா, மகன்கள் யோகவேல்ராஜ், கார்த்திக்ராஜ் மற்றும் சிலர் சேர்ந்து பணம் கேட்டு வரக்கூடாது என்று கூறி ரத்தினராஜையும், சரண்யாவையும் தாக்கியுள்ளனர். மேலும் மீண்டும் பணத்தை கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி யுள்ளனர்.

    இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ரத்தினவேல் புகார் கொடுத்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் ஏ.டி.எம். கார்டு கொடுக்காததால் பெண்ணை கணவர் தாக்கினார்.
    • பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    மதுரையை சேர்ந்தவர் மகேஷ்ராஜா. இவருக்கும், விருதுநகர் காந்தி நகரை சேர்ந்த வெள்ளையம்மாள் (வயது33) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்வது என முடிவு செய்தனர். இது தொடர்பான குடும்ப நல வழக்கு விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு மதுரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அவர்களது உத்தரவின்படி விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் இருவரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவரும் அதற்கு உடன்பட்டு மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினர்.

    சம்பவத்தன்று மகேஷ்ராஜா மனைவியிடம் ஏ.டி.எம். கார்டை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்கவில்லை. சேர்ந்து வாழும்போது ஏன் ஏ.டி.எம். கார்டு கொடுக்க மறுக்கிறாய்? எனக்கேட்டு மனைவியிடம் மகேஷ்ராஜா வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் மகேஷ்ராஜா மனைவியை அடித்து கீழே தள்ளினார். மகேஷ்ராஜா வின் தாய் பவுன்தாயும் உடன் சேர்ந்து வெள்ளை யம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் வெள்ளையம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் துறையின் கீழ் விவசாயத்தில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்களது திறனை மேம்படுத்தி உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 28 ஊரக இளைஞர்களுக்கு காளான் வளர்ப்பு என்ற தலைப்பில் தொழில்நுட்ப பயிற்சி 28.8.23 முதல் 2.9.23 வரை 6 நாட்கள் அருப்புக்கோட்டையில் உள்ள கோவிலாங்குளம் நிலையத்தில் வேளாண் அறிவியல் பயிற்சி நடைபெற உள்ளது.

    இந்த பயிற்சியில் கலந்து கொள்ள தகுதியான விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் கல்வி தகுதி குறைந்தது 5ம் வகுப்பு மேல் படித்தவராகவும், கற்றுக்கொண்ட தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதில் ஆர்வமுடையவராகவும் இருக்க வேண்டும்.

    இப்பயிற்சியானது வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் காளான் தொழில் முனைவோர் ஆகியோர் மூலம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் உழவர் பயிற்சி நிலையம், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் அவர்களை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொண்டு புதிய தொழில் முனைவோராக மாறிட, வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • அருணாசல ஈஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம் நடந்தது.
    • ரிஷப வாகனத்தில் அம்பாள், சுவாமி சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பழையபாளையம், புதுப்பாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக பொதுநல பண்டிற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர் கோவிலில் உள்ள அருணாச்சல ஈஸ்வரர் உண்ணாமலை அம்பாள் சாது அருணாச்சல சுவாமி ஆவணி மூலம் மற்றும் வருடாபிஷேக திருவிழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. கும்ப பூஜை, அபிஷேக பூஜை, அலங்கார தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாணம் நடந்தது. ரிஷப வாகனத்தில் அம்பாள், சுவாமி சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.

    சப்பர வீதி உலாவை காவல் துணை கண்காணிப்பாளர் பிரீத்தி தொடங்கி வைத்தார். வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுநலப் பண்டு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • திருச்சுழி அருகே 72 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    திருச்சுழி

    திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி. ஜெகந்நாதன் உத்தரவின்பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது மாங்குளம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற குலசேகரநல்லூர் பசும்பொன்நகரை சேர்ந்த கண்ணன்(54) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 72 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்னர்.

    • திருச்சுழி அருகே ரூ.18 லட்சத்தில் சமுதாய கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் பரளச்சி கிராமத்தில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 18 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். திருச்சுழி ஒன்றிய சேர்மன் பொன்னுதம்பி வரவேற்றார்.

    விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தண்டபாணி ,திருச்சுழி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பத்மினி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், பரளச்சி ஊராட்சி மன்றத்தலைவர் நாகு (எ) கிச்சான், அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் பஸ்- கார் மோதல்; எண்ணை வியாபாரி பலியானார்.
    • தென்காசியை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஈஸ்வரன் காலனியை சேர்ந்தவர் கணேசன்(வயது53), எண்ணை வியாபாரியான இவர் பல்வேறு ஊர்களுக்கு காரில் சென்று வியாபாரம் செய்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று கணேசன் சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் வியாபாரம் செய்ய காரில் புறப்பட்டார்.

    சிவகாசி-ஸ்ரீவில்லி புத்தூர் ரோட்டில் ஹவுசிங ்போர்டு காலனி பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

    இந்த விபத்தில் காரின் இடிபாடுக்குள் சிக்கிய கணேசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து கணேசன் மனைவி காமாட்சி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த தென்காசியை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் கட்டுரை போட்டி நடந்தது.
    • இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கல்வி வட்டம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டி நடந்தது. கல்வி வட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் அனுபாலா வரவேற்றார். இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமன் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகள் என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும், இந்தியா வளர்ந்த நாடாக மாற எதிர்கொள்ளும் சவால்கள் என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. இப்போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 33 பள்ளிகளில் இருந்து மொத்தம் 408 மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வெற்றி மாணவர்களுக்கு துணை முதல்வர் பரிசுகளை வழங்கினார். முடிவில் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் ஜமுனாராணி நன்றி கூறினார்.

    ×