என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று விபத்து- கார் கம்பெனி ஊழியர்கள் 2 பேர் பலி
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று விபத்து- கார் கம்பெனி ஊழியர்கள் 2 பேர் பலி

    • இருவரும் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தென்காசி எல்.ஆர்.எஸ். பாளையத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 22). ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெருவைச் சேர்ந்தவர் முத்துமணி (29). நண்பர்களான இவர்கள் இருவரும் ராஜபாளையம் செல்லும் வழியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் கார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ராஜபாளையம் ரோட்டில் வன்னியம்பட்டியை அடுத்த தனியார் குண்டூசி மில் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அதே சமயம் கேரள மாநிலம் கொல்லம் அவனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மெரின் வினிதா (32) என்பவர் தனது குடும்பத்தினருடன் வேளாங் கண்ணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மின்னல் வேகத்தில் வந்த கார் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குருமூர்த்தி, முத்துமணி இருவரும் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த வன்னியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×