காளீஸ்வரி கல்லூரியில் கட்டுரை போட்டி

காளீஸ்வரி கல்லூரியில் கட்டுரை போட்டி நடந்தது. இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
காளீஸ்வரி கல்லூரியில் கட்டுரை போட்டி
Published on

சிவகாசி

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கல்வி வட்டம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டி நடந்தது. கல்வி வட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் அனுபாலா வரவேற்றார். இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமன் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகள் என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும், இந்தியா வளர்ந்த நாடாக மாற எதிர்கொள்ளும் சவால்கள் என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. இப்போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 33 பள்ளிகளில் இருந்து மொத்தம் 408 மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வெற்றி மாணவர்களுக்கு துணை முதல்வர் பரிசுகளை வழங்கினார். முடிவில் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் ஜமுனாராணி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com