search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dealer killed"

    • தனியார் பஸ்- கார் மோதல்; எண்ணை வியாபாரி பலியானார்.
    • தென்காசியை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஈஸ்வரன் காலனியை சேர்ந்தவர் கணேசன்(வயது53), எண்ணை வியாபாரியான இவர் பல்வேறு ஊர்களுக்கு காரில் சென்று வியாபாரம் செய்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று கணேசன் சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் வியாபாரம் செய்ய காரில் புறப்பட்டார்.

    சிவகாசி-ஸ்ரீவில்லி புத்தூர் ரோட்டில் ஹவுசிங ்போர்டு காலனி பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

    இந்த விபத்தில் காரின் இடிபாடுக்குள் சிக்கிய கணேசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து கணேசன் மனைவி காமாட்சி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த தென்காசியை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டியில் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, மகனை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள வாடிப்பட்டியில் சின்னத்துரை என்ற விவசாயிக்கு சொந்தமான கிணற்றில் கடந்த 2-ந் தேதி வாலிபர் பிணம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரது உடலை மேலே கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த முருகன் (40) என்பதும், பழ வியாபாரம் பார்த்து வந்தவர் எனவும் தெரியவந்தது.

    அவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததால் அவரது மனைவி, மகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். முருகன் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகியும் அது குறித்து போலீசாருக்கு எவ்வித தகவலும் அவர்கள் தெரியபடுத்தவில்லை.

    இதனால் இந்த கொலையில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் மனைவி, மகன், அவரது நண்பர், மகள் ஆகிய 4 பேர்களிடம் இன்ஸ்பெக்டர் பாலகுரு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ×