என் மலர்
செய்திகள்

ஆண்டிப்பட்டியில் வியாபாரி கொலை- மனைவி, மகனை பிடித்து போலீசார் விசாரணை
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வாடிப்பட்டியில் சின்னத்துரை என்ற விவசாயிக்கு சொந்தமான கிணற்றில் கடந்த 2-ந் தேதி வாலிபர் பிணம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரது உடலை மேலே கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த முருகன் (40) என்பதும், பழ வியாபாரம் பார்த்து வந்தவர் எனவும் தெரியவந்தது.
அவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததால் அவரது மனைவி, மகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். முருகன் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகியும் அது குறித்து போலீசாருக்கு எவ்வித தகவலும் அவர்கள் தெரியபடுத்தவில்லை.
இதனால் இந்த கொலையில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் மனைவி, மகன், அவரது நண்பர், மகள் ஆகிய 4 பேர்களிடம் இன்ஸ்பெக்டர் பாலகுரு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.






