என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருதுநகர் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் வாலிபர் கைது
- பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தன்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறினார்.
- பாலியல் தொல்லையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த சிறுமி, அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி அந்த பெண்ணின் தந்தைக்கு தகவல் கொடுத்தார். வேலைக்கு சென்றிருந்த அவர் வீட்டுக்கு வந்து உறவினர்களுடன் தனது மகளை தேடினார்.
காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்தபோது மகளின் ஆடை, செல்போன் ஆகியவை கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அந்தப்பகுதியில் தீவிரமாக தேடிப்பார்த்த போது அந்த சிறுமி தந்தையின் குரலை கேட்டு அழுத படி வந்தார். அப்போது அவர் பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டியராஜன் (வயது30) என்பவர் தன்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை மகளுக்கு நடந்த கொடுமை குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியராஜனை கைது செய்தனர். இதற்கிடையே பாலியல் தொல்லையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.






