அருணாசல ஈஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம்

அருணாசல ஈஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம் நடந்தது. ரிஷப வாகனத்தில் அம்பாள், சுவாமி சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
அருணாசல ஈஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம்
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் பழையபாளையம், புதுப்பாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக பொதுநல பண்டிற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர் கோவிலில் உள்ள அருணாச்சல ஈஸ்வரர் உண்ணாமலை அம்பாள் சாது அருணாச்சல சுவாமி ஆவணி மூலம் மற்றும் வருடாபிஷேக திருவிழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. கும்ப பூஜை, அபிஷேக பூஜை, அலங்கார தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாணம் நடந்தது. ரிஷப வாகனத்தில் அம்பாள், சுவாமி சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.

சப்பர வீதி உலாவை காவல் துணை கண்காணிப்பாளர் பிரீத்தி தொடங்கி வைத்தார். வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுநலப் பண்டு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com