என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கையை மாதந்தோ றும் எண்ணுவது வழக்கம். அதன்படி அறநிலையத் துறை உதவி ஆணையர் மேல்மலையனூர ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலி ங்கம், செஞ்சி ஆய்வர் சங்கீதா, அறங்காவலர் குழுத் தலைவர் செந்தி ல்குமார் பூசாரி, ஆகியோ ர் முன்னிலையில் உ ண்டியல்கள் திறந்து எண்ண ப்பட்டன.

    இதில் 27 லட்சத்து ஆயிரத்து 917 ரூபாய் ரொக்கமும், 70 கிராம் தங்க நகைகளும், 240 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    விழுப்புரம்:

    கம்பத்திலிருந்து அரசு சொகுசு பஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பஸ்சை தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் ஓட்டி வந்தார். பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே செல்லும்போது முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் அரசு சொகுசு பஸ் லாரி மீது மோதி முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல நொறுக்கியது.பஸ் கண்டக்டர் சென்னையைச் சேர்ந்த செல்வம் சிறுகாயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மற்றொரு விபத்து : சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன்( வயது 47) ஓட்டி சென்றார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி தனியார் ஓட்டல் அருகே வரும்போது முன்னாள் சென்ற லாரியானது திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது இதனால் அரசு பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 3 பேர் சிறு காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர்பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டதை கண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் .இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, கனகாம்பரத்தின் உடலை விழுப்புரம் - திருவெண்ணைநல்லூர் - அரசூர் கூட்டுச்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த பாவாடை மனைவி கனகாம்பரம் (வயது 55).இவர் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் திருவெண்ணைநல்லூர் மலட்டாற்று பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.இதைத் தொடர்ந்து அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு போய் தேடி பார்த்தனர். ஆற்று பகுதியில் பழமையான உரை கிணறு அருகே கனகாம்பரம் வைத்திருந்த வெற்றிலை பாக்கு வைக்கும் சுருக்கு பை, குடை மற்றும் காலனி கிடந்தது.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவி னர்கள், அவர் கிணற்றில் விழுந்திருக்காலம் என கறுதி திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிணற்றில் இறங்கி தேடினர். அங்கு அவர் விழுந்ததற்கான எந்த தடயமும் இல்லை. கனகாம்பரமும் கிடைக்கவில்லை.இந்நிலையில் இன்று காலை மலட்டாறு வா ய்க்காலில் கனகாம்பரத்தின் உடல் பிணமாக மிதந்தது. அதனை கண்ட பொதுமக்கள் இது குறித்து அவரது மகனுக்கும் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.அப்போது அங்கு திரண்ட கனகாம்பரத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, கனகாம்பரத்தின் உடலை விழுப்புரம் - திருவெண்ணைநல்லூர் - அரசூர் கூட்டுச்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, அதன் அறிக்கை வந்த பிறகு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க ப்படுமென கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இறந்த கனகாம்பரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற கனகாம்பரத்தில் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கனகாம்பரத்தின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்த 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகளை அழைத்து நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
    • குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக நன்னடத்தை அலுவலர் நெப்போலியன், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா வாக்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர் பள்ளியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்திற்கு தகவல் வந்தது.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக நன்னடத்தை அலுவலர் நெப்போலியன், குழந்தைகள் அரசர உதவி அலகின் பணியாளர் ஸ்டேல்லா மேரி ஆகியோர் பள்ளிக்கு நேரடியாக சென்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்த 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகளை அழைத்து நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அப்போதும் 3, 4-ம் வகுப்புகளில் பயிலும் 2 மாணவிகள் தங்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் கருணாகரன் தங்களிடம் தீய தொடுதலில் ஈடுபட்டதாக கூறினார்கள்.

    அவர்களை தனியாக அழைத்து சம்பவம் குறித்து கேட்டுக்கொண்டிருந்த போது, 3-ம் வகுப்பில் பயிலும் மேலும் 7 மாணவிகளும், 4-ம் வகுப்பில் பயிலும் மேலும் 4 மாணவிகளும் தங்களிடமும் ஆசிரியர் கருணாகரன் தீய தொடுதலில் ஈடுபட்டதாக கூறினார்கள். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் கருணாகரனிடம் விசாரணை நடத்தியபோது பள்ளி மாணவிகளுக்கு 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக நன்னடத்தை அலுவலர் நெப்போலியன், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி அருகேயுள்ள தொரவிராமன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் கருணாகரன் (வயது 32) என்ற ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோவில் கைதான ஆசிரியர் கருணாகரனை, விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி மகா தன்வந்திரி ஹோமம் நடந்து பின்னர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்து மலர்களால் அலங்கரித்து மகா தீப ஆராதனை நடந்தது.

    பூஜை மற்றும் வேள்விகளை வேப்பூர் தங்கதுரை தலைமையில் பாபு அய்யர் செய்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மாவட்ட பொருளாளர் கருணாகரன், ஜோதிடர் கமலக்கண்ணன் மற்றும் கிராமமுக்கிய பிரமுகர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சவாமி தரிசனம் செய்தனர்

    • உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாட்டில் 1,06,49,242 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து, பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாக செயல்படும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற் றினை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் குடும்பத் திற்கு ஆதார மாகவும், உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. உழைக்கும் மகளிரின் நலனை கருத்களை பெருமைப்ப டுத்திடும் பொருட்டு, மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்கத் திட்ட மான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங் கும் உரி மைத்தொகை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தி ன் மூலம், தமிழ்நாட்டில் 1,06,49,242 பயனாளிகள் பயன்பெற்று வருகின்ற னர். விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில், 4,97,708 விண்ணப்பிங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தகுத தகுதி வாய்ந்த 3,25,514 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட குடும்பத் தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் திட் டத்தில் மேல்முறையீடு செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதற்கட்ட மாக 3,25.514 மகளிர்களுக் கும், 2ம் கட்ட மாக 22,096 மகளிர் என மொத்தம் 3.47,610 மகளிர்களுக்கு. மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வங் கிக்கணக்கில் செலுத் தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தனது செய்தி குறிப்பில் கூறி உள்ளார்.

    • பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
    • ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே நல்லாப்பாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வரும் 28 வயது இளம் பெண்ணின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அந்த இளம் பெண் 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ், விதவை உதவித் தொகை வழங்க கோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை அப்பெண் அணுகியுள்ளார். இதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கரராஜ், அப் பெண்ணிடம் இருந்து செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காதர் பாஷா, கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் போலீசார் பெண்களுக்கு பாலியல்எதிரான வன்கொடுமை மற்றும் சாதியை பற்றி பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

    மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலைய சுவாமிகள் தீப குண்டலத்தில் நெய்யினால் நிரப்பப்பட்ட மகா தீபத்தை ஏற்றிவைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில்வடிவ மலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6 மணி அளவில் உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்று.

    மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலைய சுவாமிகள் தீப குண்டலத்தில் நெய்யினால் நிரப்பப்பட்ட மகா தீபத்தை ஏற்றிவைத்தார். தொடர்ந்து முருகன், வள்ளி தெய்வானையுடன் மலைவல காட்சி நடைபெற்றது. பின்னர் சொக்கப்பனை என்னும் பெருஞ்ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. இதில் புதுச்சேரி, கடலூர் விழுப்புரம் போன்ற பெரு நகரங்களில் இருந்தும் மயிலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பெரிய செவலைக்கு சென்று வீடு திரும்பினார்.
    • முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த ஆமூர் மாரியம்மன் கோவிலை சேர்ந்வர் அரிகிருஷ்ணன் (வயது 20). இவருக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பாக சந்தியா (20) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பெரிய செவலைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது ஆமூர் செல்லும் பாதை அருகே வந்த போது, முன்னால் சென்ற வாகனம் திடீரென எதிர்பாராமல் திரும்பியது. இதில் நிலைதடுமாறிய அரிகிருஷ்ணன், முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அரிகிருஷ்ணனில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 8 மாதத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பகல் நேரத்தில் ஒரு வீட்டில் புகுந்த மர்மநபர் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூரில் உள்ள திருக்கோவிலூர் ரோட்டில் வசிப்பவர் சிவச்சரண் (வயது 42). இவர் விழுப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று காலை பணிக்கு சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.நேற்று மாலை வீட்டிற்கு வந்த சிவச்சரண், வீடு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்ற போது மர்மநபர் ஒருவர் பின்பக்க கதவு வழியாக தப்பியோடினார். இவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர் தப்பிவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த பீரோவை பார்த்தபோது அதில் ஒரு பையில் வைத்திருந்த ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் சிவச்சரண் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபரை திருவெண்ணைநல்லூர் போலீசார் தேடி வருகின்றனர். ஆள்நடமாட்டம் உள்ள இடத்தில் வீடுகள் நிறைந்த பகுதியில், பகல் நேரத்தில் ஒரு வீட்டில் புகுந்த மர்மநபர் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.இதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் அனைத்தும் துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றி கொடுக்கப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் தற்பொழுது அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, வேளாண்மை இணை இயக்குநர் கணேசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதா தேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் இளஞ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் , விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் ஸ்ரீ காந்த் தலைமை தாங்கினார். கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சிவசேனா முன்னிலை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் தனராஜன் வரவேற்றார் .

    டோல் பிளாசாவை கடந்த வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நெடுஞ்சாலை துறையினர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . உதவி பொறியாளர்கள் வசந்த பிரியா, கவுதம், ராஜ ஸ்வேதா, சாலை ஆய்வாளர்கள் சாந்தி, அருள்மொழி, பழனியம்மாள் , டோல் பிளாசா பி.ஆர்.ஓ., தண்டபாணி,துணை மேலாளர் சொர்ணமணி, போக்குவரத்து காவல் சப்–இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் சாலை பணியாளர்கள், டோல் பிளாசா ஊழியர்கள் பங்கேற்றனர் .

    ×